"அவள்" ஒரு தொடர் கதை ... : கோபம்
பாகம் மூன்று : கோபம் "நீ அவனைக் காதலிக்கிறியா?" விரிவுரை முடித்து வந்துகொண்டிருந்தவளைக் கூட்டிச்சென்று கேட்டபோது முதலில் எதுவுமே புரியவில்ல அவளுக்கு. அருகில் நின்ற உஷாவைப் பார்த்தாள். "நீ தானே சொன்னாய் கேள் எண்டு.." இப்போது புரிந்துவிட்டது. "அதுக்கு இப்படித்தான் சொல்லி வைச்சிருக்கிறியா? நான் இதையா கேக்கச் சொன்னான்?" "அதுக்கு இதுதானே அர்த்தம்." ரஞ்சன் இடைமறித்தான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதற்காய் மீண்டும் தப்பு மேல தப்பு செய்கிறாய் என்று உள்மனம் எச்சரித்தது. தூரத்தில் அவன் வழக்கம் போல தமிழ் மரத்தின்கீழே இருந்துகொண்டு எதுவுமே நடவாதது போல கடலை போட்டுக்கொண்டிருந்தான். உண்மையிலேயே இவனுக்கு சம்பந்தம் இல்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறானா? "Thamil Maram" The memories root all the way to the trunk and the bottom layed benches... Giving every thing all it can. Shades to all who have been under the mighty tree. All the stories are written inside the core and the branches are every where may be visible only to the