இடுகைகள்

டிசம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்

படம்
  உங்கள் பார்வைக்கு " எம்.ஜி.ஆர். நடித்த படங்களைக்கூட பார்க்கக் கூடாது என மனதுக்குள் சத்தியம் ஏற்றித் திரிந்தவன் நான். திரை உலகுக்கு வருவதற்கு முன்னர் நான் எம்.ஜி.ஆரின் படங்களையே பார்த்தது கிடையாது. 'அழகு என்கிற ஒற்றை வலிமையைத் தவிர, அவரிடத்தில் வேறு எந்த ஈர்ப்பும் இல்லை" என நினைத்தவன் நான். ஆனால், அப்படி நினைத்ததற்காக, ஈழத்தில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றேன்.  'ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?" என எம்.ஜி.ஆர். கேட்க, '100 கோடி ரூபாய் தேவைப்படும்!" என அண்ணன் சொன்ன உடனேயே, 'நான் தர்றேன்... நான் தர்றேன்... நீ நல்லா சண்டை பிடி!" என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்... வேறு எவரைப்பற்றி அய்யா பேசுவது? "   - சீமான் : Oneindia Tamil "இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்"

Jaffna, The next silicon valley - நாளை உங்கள் நனவாவது காணீர்!

படம்
Click here to Vote for this logo on FB மணல்மீது மாளிகையமைக்க அலைவந்து அள்ளியதென்று - களி மண்ணெடுத்து நன் நீர்தனையூற்றி அரண் செய்கிறோம் நாள்பட நாலுபேர் பார்த்து நெற்றித் தோல் நெரிபட கோட்டை கட்டும் நோக்கில் - மனக் கோட்டையிதுவோவென யாது செப்பினும் நின்மனம் கலங் காது வழிநின்று ஞாலம் இரு பொழுதும் ஆதவன் சாயாது விழிமூடாது வளர்த்திட "Jaffna, The next silicon valley" இதுவெங்கள் கனவு நாளை உங்கள் நனவாவது காணீர்! "When the world insists you to build something, you must insist on doing it your own way!" Are you getting it? Yes.. people will call it "Yarl IT HUB!"

துரோகிகளும் தூங்கிப்போனோரும்

படம்
ஆளாளுக்கு என்னமோ காகிதக்கப்பல் விடுறதுபோல ஒவ்வொரு கதை (சத்தியமா கப்டனை ச் சொல்லவில்லை) சொல்லுறாங்கள். அதால நானும் இண்டைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகவேணும். நித்திரை வருமாப்போல இருப்பவர்கள் தயவுசெய்து இப்பவே உங்கடை கனவுதேசத்துக்கு ஓடிடுங்கோ. நம்ம கனவுதேசம் கொஞ்சம் Terrorஆ இருக்கப் போகுது. யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஏசுநாதரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். வெளியே அவரின் பரமசீடன் ஒருவன் சோகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். அபோது அருகிலிருந்தவன் கேட்கிறான், "உனக்கு அவரைத் தெரியுமா?" "இல்லை." சிறிது நேரம் செல்கிறது. "உன்னைப் பார்த்தால் அவர்களிலொருவன் போலவே இருக்கிறது." "சத்தியமா, அவர்கள் எப்படி இருப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது." விடிவதற்கு இன்னும் சிலநிமிடங்களே இருக்கிறது. "இல்லை. இவன் பொய் சொல்கிறான். பிடித்து விசாரியுங்கள்." இப்போது அவனுக்கு பயம் தொறிக்கொண்டது. "ஐயோ. என்னை விட்டிடுங்கோ. நான் ஒரு அப்பாவி." எழுந்து விரைகிறான். சேவல் கூவுகிறது. "நாளை விடிவதற்குள் மூன்றுமுறை என்னைத் தெரியாத

ஈழமும் கவிராயர்களும்

படம்
"கவிராயர் எனப்படுப்படுபவர் யாரெனில், தமிழ் மொழியில் கவி இயற்றவல்ல தமிழ் அறிஞர் ஆவார்." என்று விக்கி சொல்லுது. அப்பிடி என்னத்தைத் தான் எழுதுவாங்களோ எண்டு பாத்தா முதலில் வந்தது கலிங்கத்துப்பரணி .. வித்துவான் பெ.பழனிவேல் பிள்ளை அவர்களின் விளக்கக் குறிப்புரையுடன் படித்தபோது,  கேழல் மேழிகலை யாளி வீணைசிலை   கெண்டை என்றினைய பல்கொடி தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த   னிப் பு லிக்கொடி த ழைக்கவே. யம்மா.. ஒவ்வொரு வார்த்தையும் வாசிக்கும் போது சும்மா உடம்பெல்லாம் சிலிர்க்குது.. எப்பிடித்தான் இப்படியெல்லாம் எழுதுறாங்களோ? சரஸ்வதி வந்து நாவிலை குந்தியிருப்பாவோ? ஆனாலும் முழுசா அனுபவித்து வாசிக்க இப்ப எனக்கு பொறுமையில்லை பாருங்கோ.. நாமெல்லாம் கண்ணை மூடித் திறக்கி ற துக்குள்ளை கவிஞராகிடனும். அதுக்கேதாவது வழியிருக்குதா? வந்தார் எங்கள் வைரமுத்து. ' சுதந்திரம் ' என்னவென்று சொல்றார் பாருங்கோ.. எழுத மை வேண்டும் வானத்தின் நீலத்தில் சில குடங்கள் கேட்டேன் மசியவில்லை  ஒ.. இவையெல்லாம் இன்னும் மை விட்டுத்தான் எழுதிட்டிருக்கினம் போல கிடக்குது. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது பாருங்

இளையராஜாவின் சிவபுராணம்

படம்
என்ன திடீரென்று ஒரே பக்தி மயமா இருக்கே என்று நினைக்காதேங்கோ.. நாமெல்லாம் சுத்த(?) சைவாள் பரம்பரையாக்கும். இதற்காகவே அப்பா தன்ரை சின்ன வயசிலையே அசைவம் துறந்துவிட, அம்மாவுக்கு  எண்டை சின்னவயசிலைதான் திடீர் ஞானம்வந்து அதைத்தொடர.. நம்ம பாடு திண்டாடம்.. எண்டெல்லாம் சொல்லமுடியாது. ஏனென்டா நமக்கு எதோ பசிச்சா கிடைக்கிறதை தள்ளும் குணம்தான்.. அது சைவமெண்டா என்ன அசைவமெண்டா என்ன. ஆனா இனிக்கு சைவம் தான் எண்டு முடிவு பன்னிட்டனேண்டா முன்னால மூக்குப் பிடிக்க அசைவம் மணத்தாலும் தொடமாட்டன். மற்றபடி மூண்டு நேரமும் சாப்பாடுத்தட்டை நீட்டிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் இருந்து தப்புவது எப்படி என்ற கவலைதான் அதிகம். அப்பா வேற, "ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமல் எத்தினைசனம் கிடந்து சாகுது. உனக்கு நாங்கள் இப்பிடி கெஞ்சிக் கெஞ்சி சாப்பிட வைக்க வேண்டிக் கிடக்குது" எண்டு அன்னிலையிருந்து இன்னிவரை ஒரே புராணம். என்ன முந்தி கடிதத்திலை, இப்ப ஈமெயில்ல...  டெக்னாலஜி என்னமா முன்னேறிட்டுது பாருங்க.. சே.. திருவாசகத்தைப் பற்றித் தொடங்கிட்டு சாப்பாட்டைப் பத்திக் கதைச்சிட்டிருக்கிரன் பாருங்கோ.. இப்பிடித்தான் அடிக்கடி பா

Swan on the River Avon

படம்
இரெண்டன்னம் இணைபிரியாது வாழுமே ஒன்று சீவனாம் மற்றையது சிவனாம் சீவன் பேதலிக்குமே அலைந்தோடுமே சிவனோ அசையாது பார்த்திருக்குமே Swan on the River Avon

நந்தகுமார் : அறிமுகம்

மூன்றாவதுமுறை தொலைபேசி சிணுங்க  மூட்டே இல்லாமல் புரண்டு படுத்தான்  அவள் விட்டபாடில்லை   "ஹலோ.. என்ன?" "நீ இப்ப இங்கை வாரியா.. இல்லையா?" "எதுக்கெண்டு சொல்லு" "ஒ.. சொன்னாத்தான் வருவியா?" இவளோடை வாதிட்டு  எதுவும் ஆகிறதில்லை "டே.. நான் கொஞ்சம் உதிலை போட்டு வாரன்.." "என்னடா.. நித்தியாவே..?" கேட்டது குமார் "ஓமடா.. இண்டைக்கு என்னத்தை வைச்சிருக்கிறாளோ சண்டை பிடிக்கிறத்துக்கு.." சலித்துக்கொண்டு  சட்டையைப் போட்டுக்கொண்டு  வெளிக்கிட்டான்  நந்து  அவர்கள் காதலில்  தொண்ணூறாவதுநாள் தாண்டி  பலமாதங்களாகியிருந்தன.. *****  தொடரும்..

திரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே!

படம்
உங்கள் பார்வைக்கு " செங்கடல் மிக நேரடியாகவே இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களைக் குறித்தும் தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் பேசுகிறது. இப்படத்தில் மீனவர்களும் அகதிகளுமே நடித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பு வேலைகளிலும் அவர்கள் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள். அந்த வகையில் செங்கடல் மக்கள் பங்கேற்புச் சினிமா..." -  லீனா மணிமேகலை

கடல்சேரா மீன்கள்..

படம்
என்தேடல் இதுவல்ல உன்தேடல் நானல்ல நம்தேடல் எங்கும்  சேராதே.. நீ சென்ற பாதை  என் உயிரின் வாதை  தினம் பார்த்திருந்தேன்  நீ வரவேயில்லை   விம்பங்களை த்  தாங்கிய  கண்ணாடி சொல்லும்  காலத்தால் அழிக்கப்பட்ட  காதல் கதைகளை  மூலையில் இருந்த  முருகனுக்குத் தெரிந்திருக்கும் முன் நடப்பது வெறும்  மாயத்தோற்றங்கள் என்று  பாதி நிறைந்த  தேநீர்க்  கோப்பைக்குத் தெரியும்  மீதிநிறைத்தது அவள்  கண்ணீரென்று..  மலர்த்தோட்டம்  நடுவிலொரு மலை  மலைமேல் நதி  மறுபக்கம் தொங்குபாலம் வெறும் கனவுதான் என்று  நினைத்திருந்தாள் நல்லூரான் தன்முன்  நடத்திக்காட்டும் வரை  இதயம் படபடக்க  ஓடிச் சென்று குகையினுள்ளே    பார்த்தபோது.. "அம்மா, நீ நல்லா  ஏமாத்திப்போட்டாய் இங்கை மாயாவியுமில்லை  முத்திரை மோதிரமுமில்லை" தொட்டியில் அடைபட்டிருந்த  மீன்களுக்கு மட்டும்  அவள் வலி புரிந்திருக்கும்  மௌனமாய் அழுதன..

Yarl IT Hub - To Make Jaffna the Next Silicon Valley..

படம்
Yarl IT Hub - இது என்கனவல்ல உன்கனவல்ல; நம் கனவு நம் எல்லோரினதும் கனவு வானம் பார்த்த பூமியில்லை ஆழத்தோண்டி நீரெடுத்த பூமியிது ஆழியலை தழுவிடினும் எழுந்துநின்ற தேசமிது வல்லமையிருந்தும் வாழாதிருந்து பாழாய்ப் போனதல்ல யாழென்று பாரிற்குரைப்போம் ஊரெல்லாம் தார்போட்டான் நமக்கு தண்ணிகாட்டினானா? தண்ணிமீதிலும்  தீயேற்றிக்கற்ற கல்வியெங்கே போயிற்றுரிங்கு? வீதிமேல் தாரிடமுன் வீதியின்தேவையை உணரவைப்போம் முற்றத்து மல்லிகையின் மணம் வீசவைப்போம் ஒருவரல்ல இருவரல்ல உலகெல்லாமிருந்து வந்து உங்கள் வாசல் படலைகளை த் தட்டி வீட்டுக்கொரு அறிவாளியைக் கேட்கிறோம் வானிலிருந்து சூரியன் விழினும் சந்திரன் வர மறுப்பினும் கோடிகோடி நட்சத்திரங்களின் அணிவகுப்பில் ஒரு புதிய " Silicon Valley "ஐ உருவாக்குவோம் வாரீர்! Yarl - IT - HUB To Make Jaffna the Next Silicon Valley..

பாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்!

படம்
அந்திமாலைப்   பொழுது அவனருகிருக்கும் பொழுது   மனதினிக்கும் பொழுது   மகிழ்ந்திருக்கும் பொழுது கரம் பற்றி   விரல் நீவி   தோழ் சாய தலை கோத கண் பார்க்க இதழ் சேர்க்க   மடி சாய உடல் மூட   ஆதவன் மெதுவாய் மறைய   நீதான் என் ஒளிவிளக்கு ..  அவன் உதடுகள் மொழிய   அது ஒரு பொன் .. மாலைப் .. பொழுது ..  எழுதிமுடித்துவிட்டு அவன் முகம் பார்த்தாள். மயக்க ஊசியில்லாமலே நிம்மதியாத் தூங்கிக்கொண்டிருந்தான். அணையப் போகிற விளக்கு இறுதி நேரத்தில் பிரகாசமாய் எரியுமே.. அதுபோலிருந்தது அவன் முகம். எழுந்து சென்று காலை போடவேண்டிய மருந்துகளை எடுத்து  அடுக்கினாள். நேற்று அவள்பாட்டுக்கு மருந்தை எடுத்துக் குடுத்ததுக்கு nurse திட்டியிருந்தார். அதனால் அவனை எழுப்பாமல் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்படி எத்தனை சந்தோசமான தருணங்களைத் தொலைத்துவிட்டோம் என்று நினைக்க நினைக்க வலித்தது. இனி அவன் இருக்கப் போற ஒவ்வொரு நிமிடங்களுமே சந்தோசத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என நேற்றே முடிவு செய்திருந்தாள். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் குடுக்கத் தயாராகவிருந்தாள். மருத்துவம் முட்

பாரதி கண்ணம்மா : எச்சரிக்கை

இக்கதை முழுவதும் கற்பனையே. இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பனவல்ல. தாய்நாட்டின் சுதந்திரத்தையே தன மூச்சுள்ளவரை நேசித்தவனை, ஒரு பெண் காதலித்திருந்தால்.. அவன் இறுதிக்காலத்திலாவது அவனுடனிருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால்.. என்றவொரு கருத்தை புனைவின்மூலம் முன்வைத்திருக்கிறேன். இதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள், இதைவைத்து யாருக்காவது சேறுபூசலாம் என்று காத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: "தயவுசெய்து மற்றவர்களைப் பழிப்பதுக்குமுன் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை முழுவதுமாய்  புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும்  வக்கிர எண்ணங்களுக்கு பிறரின் எழுத்தை கேடயமாகப் பயன்படுத்தாதீர்கள்!" பிற்குறிப்பு : பலரது  கனிவான வேண்டுகோளுக்கிணங்க மேலேயுள்ள வரிகள் மாற்றப்பட்டுள்ளன. உங்கள் ஏகோபித்த ஆதரவுக்கு நன்றி!"

பாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி

படம்
நேற்று முழுக்க ஒரே இருமலாக இருந்தது அவனுக்கு. இடைக்கிடை ரத்தமாய் வாந்தி வேறு. அவளது அம்மமாவுக்கும் கூட இப்படித்தான் புற்றுநோய் வந்து அவதிப்பட்டுப் பார்த்திருக்கிறாள். அவர் படும் கஷ்டத்தைப் பார்க்க இயலாமலே அவவை சீக்கிரம் கொண்டு போகச்சொல்லி கடவுளிடம் பிரார்த்திதிருக்கிறாள்.  ஆனால் இவன் சாகப் போகிறான் என்பதை மட்டும் அவள் மனம் ஏனோ ஏற்க மறுத்தது. 'முப்பது வருஷ வாழ்க்கையை மூன்றே நாளில் வாழ்வதென்றால்? கடவுளே நீதான் எனக்கு முழு சக்தியையும் குடுக்க வேணும்.' மனதுக்குள் வேண்டிக்கொண்டாள். "கண்ணம்மா.." அவன் வலியில் முனகினான். ஓடிச்சென்று அவனது தலையை நிமிர்த்தி கன்னத்தை மெதுவாய் தடவிவிட்டாள். "வலிக்குதாடா..? கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் போய் மருந்தேடுத்துக்கொண்டு வாறன்." சொல்லிவிட்டு ரெண்டே எட்டில் மேசையை அடைந்து லேபல் படித்து மருந்தையும் தண்ணியையும் கொண்டு வந்து கட்டிலின் அருகிலிருந்த ஸ்டூலில் வைத்தாள். தலைக்குப் பின்னால் ரெண்டு தலையணையை அடுக்கி அவனை சற்றே வசதியாய் சாய்ந்து இருக்க வைத்தாள். அவன் பேசாமலிருந்தாலும்  வலியின் கொடூரம் முகத்தில் தெரிந்தது. மருந்துகளை மீண்டும

பாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே

படம்
யார் எப்படிப்போனால் அவளுக்கென்ன வந்தது. பேசாமல் வந்தமா பார்த்தமா போனமா எண்டு இருக்கிறது தானே. அப்போ படிப்பு? இன்று இப்படி வந்ததுக்கே டிஸ்மிஸ் பண்ணுற சாத்தியகூறு அதிகம். அதுவும் முதல் நாளே இப்படி ஓடுகாலி போல சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவளை எப்படி சேர்ப்பினம்? ஆனால் வீட்டை எந்த மூஞ்சிய வைச்சுக்கொண்டு போய்நிற்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. அப்பவும் படிச்சுப் படிச்சு சொல்லி அனுப்பினவை. கேட்டாளே? எத்தனை நம்பிக்கையுடன் வந்திருந்தாள். ஆனால் அவன்..? கானல் நீராய் போன அந்த ஒவ்வொரு பொழுதுகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என் நெஞ்சுக்கூட்டுக்குள்..! வந்த முதல் நாளே இப்படிப் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிவிட்டு வருகிறவளுக்கு நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவருக்கு, அவள் வந்து நின்ற கோலம் பதை பதைப்பை ஏற்படுத்தியது. உன் பார்வை உன் புன்னகை உன் கோபம் எதுவும் மறையவில்லை இன்னமும்.. மணல் மீது வரைந்த கோடுகள் அலை மீது எழுதிய கோலங்கள் எது உண்மை ? "what happened to you? are you ok?" அவள் தலையை மட்டும் ஆட்டினாள். அவள் நின்ற தோரணை  அ

பாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே

படம்
இதுதான் அவரின் அறை. பூட்டியிருக்குமா? தட்டலாமா? வேறு யாரவது இருப்பார்களா? நெஞ்சு  படபடவென்றது. மெதுவாக கைப்பிடியை திருகிப் பார்த்தாள். திறந்தேயிருந்தது. தொண்டைவரை வந்துவிட்ட மகிழ்ச்சியை விழுங்கிக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். ஒரேயொரு கட்டில் தானிருந்தது. அதன் மேல் கிழிந்துபோன துணியாய் அது.. அவனேதான். நல்லதோர் வீணைசெய்தே -அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? கடவுளே இந்தக் கோலத்தைப் பார்க்கத்தான் இத்தனை கடல் தாண்டி மலை தாண்டி வந்தாளா? எதற்காய் இவனுக்கு இப்படி ஒரு பெரிய தண்டனையைக் கொடுத்தாய், ஆண்டவா.. கண்களை நீர் மறைத்தது. இந்தக் கோலத்தில் அவன் என்னைப் பார்ப்பதை விரும்புவானா? இல்லை. விரும்பியோ விரும்பாமலோ இத்தனை கஷ்டப்பட்டு வந்தாயிற்று. ஒருதரம் அவனது கைகளைத்தன்னும் தொட்டுப் பார்த்துவிட்டு ஓடிடணும். சத்தம் போடாமல் மெதுவாய் அடிமேல் அடிவைத்து அவனருகில் சென்றாள். அவன் வலியால் முனகுவது போலிருந்தது. தலையை மெதுவாய் தடவிவிட்டாள். முறுவலித்தான். இந்த நேரத்திலும் இந்தச் சிரிப்புக்கொண்டும் குறைச்சலில்லை. கோபமாய் வந்தது. குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள். உடலில் சற்றே அசைவு தெரிந்தது. போ

பாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று

படம்
அதிகாலை  நாலு  மணிக்கே  அலாரம்  வைத்திருந்தாள். இப்படி அலாரம் வைத்து எழுந்து அவளுக்குப் பழக்கமில்லைத்தான். இருந்தாலுமே இங்கை இருக்கிற ஒரு நிமிடம் கூட வீணடிக்கக்கூடாது என்பதில் கவனாமாயிருந்தாள். ஹாட் வாட்டர் போட்டு குளித்துவிட்டு உடை மாற்றி பவுடர்பூசி பொட்டுவைக்க முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது, தன் அழகைப் பற்றி அவளுக்கே கொஞ்சம் கர்வம் வந்தது. பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் இப்படி அவனுக்குப் பிடித்த கலரில் உடையணிந்து அவனுக்குப் பிடித்த ஒரு பெண் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று முன்னால் போய் நின்றால் எப்படி  ரியாக்ட் பண்ணுவான்? நினைக்கவே மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பூ கொளுத்தியது போல இருந்தது. மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ கண் பாராயோ வந்து சேராயோ கடிகாரத்தைப் பார்த்தாள். ஐந்து மணிதான் ஆகியிருந்தது. வார்டன் எட்டு மணிக்குத்தான் வருவார் என்று நேற்று செக்யூரிட்டி சொன்னது. அதுவரை காத்திருக்க முடியாது. அதற்குள் போய்ச்சென்று பார்த்துவிட்டு வந்திடலாமா? சும்மா இருந்து யோசித்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. பர்சை எடுத்துக்கொண்டு கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே