திரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே!
உங்கள் பார்வைக்கு
"செங்கடல் மிக நேரடியாகவே இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களைக் குறித்தும் தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் பேசுகிறது. இப்படத்தில் மீனவர்களும் அகதிகளுமே நடித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பு வேலைகளிலும் அவர்கள் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள். அந்த வகையில் செங்கடல் மக்கள் பங்கேற்புச் சினிமா..." - லீனா மணிமேகலை
கருத்துகள்
நிற்க, புதிதாய் இன்று தொடங்கியிருக்கும் "உங்கள் பார்வைக்கு" என்ற இப்பகுதி, சும்மா நெட்ல அலசிட்டிருக்கிரப்போ கண்ணிலை கொஞ்சம் உறுத்திட்டிருக்கிரத்தை போடுற பகுதி. கிட்டத்தட்ட "தெரிவிப்பது நாங்கள்.. தீர்மானிப்பது நீங்கள்.." மாதிரி.. ஹிஹி.. :)
//நாங்கள் வெப்-சைட்டில் விளம்பரம் கொடுத்தபோது,எங்களைத்தொடர்பு கொள்ளாதது அவர்கள் தவறு. -- சுகாஸினி //
இதில் கொஞ்சமே அர்த்தம் இருக்கிறதோ. ஏன் செலக்ட் ஆகவில்லை என்று முதலிலேயே கேட்டு, அப்போதும் இல்லை என்று ஆகி இருந்தால் எதிர்ப்பு காட்டி இருக்கலாம். படம் கூட விழாவில் திரையிடப்பட்டு இருக்கும் சந்தர்ப்பம் அதிகம்.
எது எப்படியோ .. இந்த திரைப்பிட விழாவுக்கு எப்படி படம் செலக்ட் பண்ணுகிறார்கள் என்பது மிஸ்ட்ரி தான்.
அப்பிடியா? நானொரு படம் எடுக்கிறதா இருக்கிறன். அதிலை முன் வரிசையில முதல் சீட்ல இருந்து கழுத்துநோக முழுப்படத்தையும் பார்க்கக் கடவது.
//ஏன் செலக்ட் ஆகவில்லை என்று முதலிலேயே கேட்டு, அப்போதும் இல்லை என்று ஆகி இருந்தால் எதிர்ப்பு காட்டி இருக்கலாம்.//
அது சரிதான். ஆனால் தொடர்புகொள்ளாமல் வந்து வெறுமனே கூப்பாடுபோட்டிருப்பார்களா? ஒருவேளை பப்ளிசிட்டியாக்கூட இருக்கலாம்.
//இந்த திரைப்பிட விழாவுக்கு எப்படி படம் செலக்ட் பண்ணுகிறார்கள் என்பது மிஸ்ட்ரி தான்.//
நம்மாக்கள் எப்ப இந்த மூடுமந்திரமேல்லாத்தையும் விடினமோ அன்னிக்குத்தான் உருப்படுவம்.