எம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்


 உங்கள் பார்வைக்கு
" எம்.ஜி.ஆர். நடித்த படங்களைக்கூட பார்க்கக் கூடாது என மனதுக்குள் சத்தியம் ஏற்றித் திரிந்தவன் நான். திரை உலகுக்கு வருவதற்கு முன்னர் நான் எம்.ஜி.ஆரின் படங்களையே பார்த்தது கிடையாது. 'அழகு என்கிற ஒற்றை வலிமையைத் தவிர, அவரிடத்தில் வேறு எந்த ஈர்ப்பும் இல்லை" என நினைத்தவன் நான். ஆனால், அப்படி நினைத்ததற்காக, ஈழத்தில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றேன். 
'ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?" என எம்.ஜி.ஆர். கேட்க, '100 கோடி ரூபாய் தேவைப்படும்!" என அண்ணன் சொன்ன உடனேயே, 'நான் தர்றேன்... நான் தர்றேன்... நீ நல்லா சண்டை பிடி!" என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்... வேறு எவரைப்பற்றி அய்யா பேசுவது? " - சீமான் : Oneindia Tamil

"இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்"



கருத்துகள்

மன்மதகுஞ்சு இவ்வாறு கூறியுள்ளார்…
சீமானிடம் கோபம் இருக்கிறது, உணர்வு இருக்கிறது,ஆனால் சில வேளைகளில் மேடை நாகரீகம் இல்லை.. அண்மையில் நாம் தமிழர் கட்சியில் இணையாதவர்கள் ஒரு தகப்பனுக்கு பிறக்காதவர்கள் என்ற ரீதியாக பேசி அவ்ர்மீதுள்ள நேசத்தை கேள்விக்குறியாக்கிவிட்டார்,ஆனால் 2008 இறுதிக்காலத்தில் நேரில் ஒருதடவை கிளீநொச்சி சேரனில் அவரை சந்தித்திருந்தேன்,திரப்படம் எடுப்பதற்காக வந்திருந்தபோது,தம்பி படத்தை பற்றியும் வாழ்த்துக்கள் திரைப்படம் படம் பற்றீயும் நான் அவருடன் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போது அவர் இந்திய சினிமா உலகம் பற்றி சொன்ன விடயங்கள் அவரின் ஆளூமையை பறைசாற்றியது, மீண்டும் அவர் திரைத்துறைக்கு வரவேண்டும்
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
பலர் கோபம் வருகையில் நிதானம் தவறிவிடுகின்றனர். ஆனால் தவறென்றுனரும் பட்சத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கலாம்.

//மீண்டும் அவர் திரைத்துறைக்கு வரவேண்டும்//
அவர் நினைத்தாலும் வர விடமாட்டார்கள். :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)