மரண வாசலில் மலர்ந்த காதல்
மரண வாசலில் மலர்ந்த காதல் மறுஜென்மம் வேண்டாம் முடித்துவிடு இங்கேயே..! முதல் பார்வையிலே மூச்சை நிறுத்தியவன் முகவரி அறிந்ததும் முகம் திருப்பினான் அவளுக்குக் கோபம் வரவில்லை நம்பியிருந்தாள் முன்வந்து நின்றான் முகம் பார்த்தான் முத்தம் கொடுத்தான் முதல் காதல் முதல் முத்தம் மூன்றே நிமிடங்கள் முதல் பிரிவு அவளுக்குக் கோபம் வரவில்லை மறுபடி வந்தவன் முகம் காட்டாது முகவரியும் சொல்லாது மறந்துவிடென்று மறைமுகமாய்ச் சொல்லியனுப்பி மண்வாசம் போதையேற்ற முல்லை மயக்கியிளுக்க முரசம் கொட்டினான் அவளுக்குக் கோபம் வரவில்லை வேறிடம் செல்கிறான் விரைவில் சொல்கிறோம் வந்துபார் என்றவர்கள் வழிமாறினார்கள் மூச்சுள்ளவரை போராடினான் மரண வாசலில் நின்றும்கூட மறந்தும் கேட்க்கவில்லை மங்கையவள் எங்கேயென்று அவளுக்குக் கோபம் வரவில்லை இத்தனை வருடங்களில் எத்தனை காதல் எத்தனை காமம் எத்தனை ஏமாற்றம் அத்தனை வலிகளையும் தாங்கித் தாங்கியின்று இதயம் எரிமலையாய்க் கொதிக்கின்ற போதிலுமே அவளுக்குக் கோபம் வரவில்லை அமைதியாயிருந்தான் அவனன்று கொள்கை கலைந்துவிடுமென்று அழாதிருக்...