ஜே ஜே



இன்னிக்கு திடீரெண்டு ஏனோ இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே எண்டு பாடிட்டு இருந்தப்போதான் அட நம்ம JDயை  மன்னிக்கவும் JC சாரைப் பத்தி கொஞ்சம் எழுதலாமே எண்டு தோணிச்சுது. SPB, யேசுதாஸ் ஹரிஹரன் என்று இத்தனை ஜாம்பவான்கள் இருக்க உனக்கு ஏன் சாரைப் பிடிச்சுது என்று நீங்க கேட்டா கொஞ்சம் இந்தப் பாட்டைப் பாருங்க.


சத்தியமா இது ஜெயச்சந்திரன் சார் பாடினதெண்டே நம்ப முடியலைங்க. குரல்லை இன்னும் என்ன இளமை எண்டு பாருங்க? இதப் பார்க்கும் போது தாலாட்டுதே வானம் என்ற பாடலின் ஞாபகம் வருவதை ஏனோ தடுக்க முடியவில்லை. இசையப் பத்தியெல்லாம் எனக்கு ஒண்டும் தெரியாதுங்கோ.. ஆனா எதோ ஒரு பீலிங்க்சு.. சே என்னாச்சு உனக்கு? வாரத்தில போடுறதே ரெண்டு பதிவு.. அதிலையும் இப்பிடி சொதப்பினா எப்படி? ஹ்ம்ம்.. நெக்ஸ்ட்டு..


இது கொஞ்சம் மனதை சற்றே ஆழமாய் வருடிச்செல்லும் பாடல். ஆங்கிலத்தில் சொல்வதானால் "Where have you been all my life?". டோய்.. இது இப்ப தேவையா உனக்கு? நிச்சயமா RM வந்து உண்டை ப்ளாக்ஐ வாசிக்கப் போவதில்லை. ஆனால் Mr.JD தற்ச்செயலாய் தடுக்கி விழுந்து வந்து வாசிச்சாலும் வாசிக்கலாம் யார் கண்டது? ஆனாலும் கவனம் நம்ம ஜெயச்சந்திரன் சாருக்கு கொலைவெறி பாட்டே ஆகாதேண்டு எழும்பி போய்ட்டார். நீவேறை அதிகமா உண்டை அரைகுறை ஆங்கிலப் புலமையைக் காட்டப் போய் மாட்டிக்காதை சரியோ?


நிற்க, என்னதான் சாரின் வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் வெகுவாக ரசிகர்கள் மத்தியில்  பிரபலமாகியிருந்தாலும், என்னை தீவிர ரசிகையாக்கியது தேவராகம் படத்திலிருந்து ஷிஷிரகால என்ற பாடல் தான். உலகத்திலை எத்தினையோ விதமான உறவுகள் இருக்கு. வெளிப்படையாய் சொல்ல முடியாத சில உறவுகள், கானல்நீராய்ப் போன உறவுகள், பிரிவு நிச்சயம் என்று தெரிந்தும் தொடரும் உறவுகள்.. உள்ளே ஏதோ வலிக்கும். ஆனாலும் அந்த வலிகூட ஒரு சுகம் தானே. அந்த சுகமான வலியை எப்படியெல்லாம் ஜெயச்சந்திரன் சார் பாட்டிலை கொண்டந்திருக்கிறார் பாருங்கோ.

அடுத்து ஒரு situation song.(?!) பெண்கள் பிள்ளை பெற்றால் மட்டும் தான் தாயாக முடியுமேன்றில்லை (சிலர் பெற்றாலுமே தாயாக முடியாது.. அது வேறை, அதை பிறகு பாப்பம்.) தவிர, உண்மையான அன்பு கூட யாரும் அறியாமலே அவளைத் தாயாக்கிவிடும்.  தலைகோதி தூங்க வைக்க, குளிப்பாட்டிவிட, உடையணிவித்து  காலணிமாட்டிவிட இன்னும் எத்தனைவோ.. இந்தப் பாடலில் ராதிகாவின் அன்புகூட அத்தகையதே.. ஆனாலும் விஜயகாந்தின் இளமைத்தேடலால் அதனை அறிந்துகொள்ள முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட முயலவில்லை என்றே சொல்லலாம். ஒரே வரிகளை இருவேறு உணர்வுகளுடன் கொண்டுசெல்லும் இந்தப் பாடலில் ஜெயச்சந்திரன் சார் நிஜமாகவே குரலால் காதலிக்க வைத்திருக்கிறார்.


பாதைகள் ஒன்றெனினும் 
பயணங்கள் எதிர்த் திசையிலே.. 
தேடல்கள் ஒன்றாயினும் 
தேடியடைந்ததன் அர்த்தங்கள் வேறே.. 
உணர்வுகள் ஒன்று சேருமிடத்தில்.. 
உறவுகளின் விருப்பங்கள் வேறு 
இனிய பொழுதுகள் சுகம் தரினும்
இனியென்றும் வராதென்று புத்தி சொல்கையில்  
இதையமே நீ கேட்க்கத்தான் வேண்டும்.





சரி சரி ரொம்ப serious ஆய்டாதேங்கோ.. என்னதான் நம்ம பாஸ் கொஞ்சம் சீரியஸ் பேர்வழின்னாலும், அவரும் சிரிக்க வைச்சிருக்கிறார்.. எப்பிடின்னா..


அட, சிங்கபூரில காதலிக்க இப்படி கூட இடங்களிருக்குதா என்ன? (மு.கு: சீனரி மற்றும் பாட்டை மட்டும் ரசிங்க. முன்னாலை ரெண்டுபேர் போடுற கூத்தைப் பற்றி நான் மூச்..)


உங்கள் கவனத்துக்கு: "In Zoo, They Feed panthers with Horse meat" 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)