Martin and Me!



இப்பெல்லாம் ஒழுங்கா ஒருமனதா இருந்து ஒரு தொடர் எழுதுறதே பெரிய கஷ்டமா இருக்குது. அதாலை தான் முகப்புத்தகத்தை வேறை மூடிட்டு, கன நாளைக்குப்பிறகு தேவதாசின்னு ஒரு தொடர் தொடங்கி ரெண்டு பதிவு போட்டிருக்க மாட்டம்.. கப்ல வந்து நம்ம மன்மதக்குஞ்சு எமி ஜச்சொனை இழுக்க நமக்கு Ricky Martin ஞாபகம் வந்து (நிற்க, இவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம் எண்டு என்னை கேக்காதீங்க), தேவதாசி இண்டைக்கு மார்டின் தாசியாகி இப்படியொரு பதிவு போடவேண்டியதாப் போயிட்டுது. 
மு.கு: இங்கு மார்டின் என்பது ரிக்கி மார்டினை மட்டுமே குறித்து நிற்கிறது.

நம்ம மார்டின் சாரை பெரும்பாலும் எல்லோருக்குமே தெரிஞ்சிருக்குமேண்டதால, நான் பெருசா அறிமுகமேண்டு குடுக்கப்போய், எனது அலட்டலை நீங்க கஷ்டப்பட்டு ஜீரணிக்க வேண்டியிருக்காது. தெரியாதவங்க விக்கில படிச்சுக்கோங்க. நான் இங்கை சொல்ல வந்தது, நான் எப்படி மார்டின் ரசிகையானோமெண்டு மட்டும் தான். 

இற்றைக்கு சுமார்.. வேணாம் இது பழைய வசனமாப்போட்டுது.. சரி..

பல வருடங்களுக்கு முந்தி எண்டைக்கோ ஒருநாள் பம்பலப்பிட்டி MCல மைத்து.. மைத்து.. எண்டு ஒரு(கவனியுங்க ஒண்ணுதான்) நண்பியுடன் சுத்திட்டிருந்தப்போ.. ஒரு மியூசிக்ஷாப்க்கு கூட்டிடுப்போனா. அவ ஒரு ஆங்கிலப்பாட்டுப் பைத்தியம். நாமக்கோ அப்பெல்லாம் ஆங்கில அறிவு ரொம்ப கம்மி (இப்பமட்டும் என்னவாம்? சும்மா தெரிஞ்ச ரெண்டு வார்த்தையை வைச்சு பீத்திட்டிருக்கிரம். உடுவில்லையோ கோன்வேன்ட்லையோ படிச்சம் எண்டு யாரிட்டையும் சொல்லிடாதீங்கப்பா).. ஆனா மைத்து சும்மா ஆங்கிலத்தில நல்லா வெளுத்து வாங்கும். அதால அவள் வாங்குவதுக்கேண்டு பொறுக்கிய CD எல்லாத்தையுமே ஒருவித பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், என்னிடம் 'எதுவுமே வாங்கவில்லையா?' எண்டு கேட்டாள். எனக்கு ஒருமாதிரியாப்போச்சுது. கடைக்காரன் வேறை ஏளனமாப் பாக்கிராப்போல இருந்திச்சுதா.. ஏதாச்சும் எடுத்தே ஆகணும் என்கிற நிலைமை. தோழியிடமே suggestion கேட்டேன். அப்போ தற்ச்செயலா கண்ணில பட்டவர்தான் இந்த திருவாளர் மார்டின் அவர்கள்.. அவர் யாருன்னே அப்போ எனக்கு தெரியாது. ஆனா அந்தக் கண்ணு மட்டும் இருக்கே.. சே. இங்கயும் கண்ணா.. வேணாம் விட்டிடலாம்.

நமக்கெல்லாம் ஆங்கிலத்தில, கதைச்சாவே புரியிரத்துக்கு ரெண்டு நிமிஷமாகும், இதிலை பாடினா கேக்கவா வேணும்? கொண்டு வந்து போட்டுப் பாத்தா.. முதலாவது பாட்டு 'Livin’ La Vida Loca' சுத்தம்..  என்னயிது வொட்காவோ லொக்காவோ எண்டு எரிச்சலாப் போய் அகராதிய தூக்கி கிட்டத்தட்ட அம்பதுவாட்டி புரட்டியிருப்பன். ஆனா பொருளையே காணோம். இவங்களையெல்லாம் பாடச்சொல்லி யார் அழுதது? தூக்கி ஒரு மூலைல போட்டாச்சு. ஆனாலும் அந்தக் கண்கள் மட்டும் ஏனோ என்னை கேள் கேள் எண்டு சொல்லிட்டே இருந்திச்சுது.

ஒரு ரெண்டு நாளைக்குப் பிறகு திருப்பி எடுத்துப் போட்டன். இந்த தடவை வரிசைல போகாம இடைக்கில பாப்பம் எண்டுபோட்டு பாத்தா கண்ணில பட்டது 'The Cup Of Life (Spanglish Version)'. வரிகளே கவித்துவமா இருக்குதே கொஞ்சம் கேட்டுப் பாப்பம் எண்டு பிளே பண்ணினா.. காதுக்குள்ளை டமார் எண்டு விழுந்த முதல் வார்த்தை 'Do you really want it? ' அஹ்.. கேக்கலை எகெயின்? Do you really want it? (yeah) 



ஒரே குரலில் போதையும் உற்சாகமும் கலந்தே இருக்குமா? அதிலும் ஆங்கிலப்பதிப்பில் 'I see it in your eyes' எனும்போது குரல்ல ஒரு குழைவு இருக்குமே பாருங்க.. யம்மாடிவோவ்.. பிறகென்ன மைத்துவிடம் இருந்த மிச்ச மீதி ரிக்கி CDகள், கணனியில் சேர்த்து வைத்திருந்ததென எல்லாத்தையுமே தூக்கிட்டுவந்து போட்டுபோட்டு கொஞ்சக்காலமா வீட்ல இல்லையில்லை என்ரை காதிலை மட்டும் ரிக்கி மார்டின் non-stopபா காட்டுக்கத்தல்.

இன்னிக்கு 'Life, MAS, Unplugged' என்று அவரின் எத்தனையோ தொகுப்புகள் வந்துவிட்டன. அதெல்லாம் எப்பவாவது இருந்திட்டு ஞாபகம் வந்தா போட்டுப் பாக்கிறது. ஆனாலும் எப்ப போட்டாலுமே 'Sound loaded' இலிருந்து 'Are You In It' என்ற பாட்டை எப்படியும் குறைந்தது ஒருமுறையாச்சும் கேட்டே ஆகவேண்டும். 
Are you in it for love
Are you in it for money
If I lost everything
Would you be there in the morning 
ரொம்பவே நொந்து போயிருப்பாரோ? ஒருக்கா நம்ம தேவதாசியை யாராச்சும் வாசிச்சுக் காடுங்க அவருக்கு.. அப்படிப்பட்ட பெண்களில் இப்படிப்பட பெண்களும் இருக்கிறார்கள் என்று.. ஒரு ஆணைவிட ஒரு பெண்ணால் தான் அவரை அதிகமாய் ரசிக்க, நேசிக்க முடியுமென்று.. (டபுள் மீனிங் எல்லாம் இல்லை..)

நிற்க, பாடல் தொடர்கிறது. மார்டின் margarita அடிச்சா எப்படி இருக்கும்? 
Ay mama, you're my sweet mamacita
You've gone to my head, like too many margaritas... heh 
(நிறுத்துடி.. நாளைக்கு யாரோ ஒரு பதிவர்கிட்ட நார் நார கிழிவாங்க போறா எண்டு மட்டும் தெரியுது..)

Are you in it for kicks,
Private jets and Armani
When the ride's over will you even bother to call me 

எளிமையான வரிகளுக்குள்ளும் எத்தனை ஆழமிக்க உணர்வுகள்? 

Are you in it for more than a minute
'Cause too much is never enough
Are you in it for you, are you in it for me 

இசைக்காக வரிகளை விட்டுக்கொடுக்காத ஒரு மனிதர். He is really Great!


'Spanish Eyes' முதலில் கேட்க்கும் போது பெரிதாய் கவரவில்லை. ஆனால் பலவருடங்களுக்குப் பிறகு ஒருநாள் சல்சா வகுப்பில் இந்தப் பாட்டுக்கு ஆடினபோது 'Just felt something'. He really touched my soul!
You say that you sing, that you're some kind of dancer
But the stars in your eyes never reveal the answer
One fine day you'll be walking out that door
I hope you'll find just what you're looking for

பிற்குறிப்பு: இத்தனை வருடங்களின் பின் இண்டைக்கு ஒருமாதிரி அந்த வரிகளின் அர்த்தம் கண்டு பிடிச்சிட்டமில்லை. "என்ன கிறுக்குத்தனமான வாழ்க்கை?" சே..




கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
கௌரி! உங்களுக்கு கோபம் வரலாம் .. ஆனால் This is probably your "the" best blog entry todade! Remy Martin அ விட்டு தள்ளுங்க!!! அந்த எழுத்து நடை, அபாரம். சரளமான வாசகனை கட்டிப்போடும் flow. கீர்த்தியின் விருது சரியாக இன்று தான் தலையில் அமர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்!!!
Congrats!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லா புகழும் RMக்கே.. ;)
மன்மதகுஞ்சு இவ்வாறு கூறியுள்ளார்…
நாங்கெல்லாம் ரிக்கி மார்ட்டின் யாரெண்டு தெரியாமல் தேவாவின் புண்ணீயத்தில் ரிக்கி மார்ட்டினின் இசையுலகத்துக்கு பிரவேசித்தவர்கள்,அவரின் பாடல் இசை, ஆங்காங்கே காணப்படும் சில நல்லவரிகள் ( மூதேவி அது மட்டும்தான் உனக்கு விளங்கியிருக்கெண்டு பப்ளிக்கா சொல்லாம பம்முறேன்னு JK மைண்ட் வாய்ஸில் பேசுறது கேட்குது..) மட்டும் விடியக்காலையில எழும்பி பாடமாக்கி பாடினதோடு சரி,,ஆனா நீங்க உங்க பிரண்டு மைத்து ( இந்த மயில் ஏன் நமது டேட்டா பேஸில் அலங்கரிக்கவேயில்லை 2003 இல் ... ஜஸ்ட் மிஸ்) க்கே பாடல் வரிகளையும் விளக்கத்தையும் என்னமா பிரிச்சு மேஞ்சிருக்கீங்க.. அப்பாடா ஒரு மாதிரி இண்டர்நேசனல் க்குள்ளே எண்ட்ரி ஆகியாச்சு அப்பிடியே ஜஸ்டின் பைபர், ஜனெட் ஜாக்சன் பற்றீ அள்ளீ விடுங்க... டேய் JK அதுதான் சொன்னோமில்ல நாம அலசி ஆராய்ஞ்சுதான் விருது கொடுத்தோமெண்டு.. ( கொசுறு -ஏன் முகநூல் மூடப்பட்டுள்ளது கூகிளீ டைப்பி தேடியும் கிடைக்கல)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
விரைவில் ரசிகை ஈழ மண்ணில் காலடிஎடுத்துவைக்க இருக்கிறார். மற்றையவை பின்னர் பதிவாகும். :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)