அன்றும் இன்றும்
March 5, 1975 Homebrew Computer Club Gordon French's garage Menlo Park, San Mateo County, California என்ன தம்பியவை செய்யுறியள்? சும்மா உந்த தட்டுமுட்டு சாமானுகளை ஆராயுறதை விட்டிட்டு போய் ஒழுங்காப் படிச்சு நல்ல உத்தியோகத்தைத் தேடுறதை விட்டிடு.. இப்பிடி கண்டதுகளோட சேர்ந்து கழுதை கெட்டு குட்டிச்சுவர் தான் ஆகப் போகுது.. சொல்லிப்போட்டன் சரியோ..? உதுகளுக்கு என்ன சொல்லியென்ன.. நாலுநாள் பட்டினி போட்டால் வீட்டை வந்து கிடக்குங்கள். இதபார்.. என்ன வேணா செய்.. ஆனா பிறகு காசெண்டு வந்து வீட்டிலை கைய நீட்டிட்டு நிக்கப் படாது விளங்கிச்சுதோ? மகனே! உன்னாலை முடியும்டா.. நீ சாதிக்கப் பிறந்தவன். என்ன வேணுமெண்டாலும் கேள் என்னால முடிஞ்சதை செய்து தாரன். (சொன்னவர்: Steve Jobs இன் தந்தை) March 3, 2012 Yarl IT Hub Auditorium, IIS Campus, Jaffna என்ன தம்பியவை செய்யுறியள்? சும்மா உந்த ... இல்லை ஐயா.. நாங்கள் எங்கடை இளைய தலைமுறையிண்டை திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டித் தான் இத்தனையும் செய்யுறம். அவங்கள் வெறுமனே ஏட்டுப் படிப்பு எண்டு மட்டுமிருக்காமல் இப்படி பல நிகழ்வுகளிலை கலந...