அன்றும் இன்றும்


March 5, 1975
Homebrew Computer Club
Gordon French's garage
Menlo Park, San Mateo County,
California


என்ன தம்பியவை செய்யுறியள்? சும்மா உந்த தட்டுமுட்டு சாமானுகளை ஆராயுறதை விட்டிட்டு போய் ஒழுங்காப் படிச்சு நல்ல உத்தியோகத்தைத் தேடுறதை விட்டிடு.. இப்பிடி கண்டதுகளோட சேர்ந்து கழுதை கெட்டு குட்டிச்சுவர் தான் ஆகப் போகுது.. சொல்லிப்போட்டன் சரியோ..?

உதுகளுக்கு என்ன சொல்லியென்ன.. நாலுநாள் பட்டினி போட்டால் வீட்டை வந்து கிடக்குங்கள்.

இதபார்.. என்ன வேணா செய்.. ஆனா பிறகு காசெண்டு வந்து வீட்டிலை கைய நீட்டிட்டு நிக்கப் படாது விளங்கிச்சுதோ?


மகனே! உன்னாலை முடியும்டா.. நீ சாதிக்கப் பிறந்தவன். என்ன வேணுமெண்டாலும் கேள் என்னால முடிஞ்சதை செய்து தாரன். (சொன்னவர்: Steve Jobs இன் தந்தை)



March 3, 2012
Yarl IT Hub
Auditorium,
IIS Campus, Jaffna

என்ன தம்பியவை செய்யுறியள்? சும்மா உந்த ...

இல்லை ஐயா.. நாங்கள் எங்கடை இளைய தலைமுறையிண்டை திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டித் தான் இத்தனையும் செய்யுறம். அவங்கள் வெறுமனே ஏட்டுப் படிப்பு எண்டு மட்டுமிருக்காமல் இப்படி பல நிகழ்வுகளிலை கலந்து கொண்டு தகவல்களைப் பகிர்வதாலை தங்கடை தனிப்பட்ட திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளுவினம். அதுமட்டுமில்லை இப்படிப் பல சாதனையாளர்களுடன் நேரடியாகவே தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியுறதால, பலவிடையங்களைத் இலகுவாகத் தெளிவு படுத்திக் கொள்ளுவது மட்டுமில்லாமல் தங்களாலும் சாதிக்க முடியுமென்ற ஒரு நம்பிக்கை வரும்.. அதுதானே முக்கியம் இப்ப எங்களுக்கு..

சரி சரி.. என்னமோ பண்ணுங்கோ.. நாங்களும் இருந்து பாக்கத்தானே போறம்.. அப்பிடி என்னத்தை கிழிக்கப் போறீங்கள் எண்டு.. (சொன்னவர் : யாரோ)






The inaugural community meet of Yarl IT Hub filled with panel discussions, student presentations, knowledge sharing and many more surprises will be on the 3rd of March 2012. Register now to attend by visiting http://yarlithub.org/event.php

*webcast available

கருத்துகள்

Vimalaharan இவ்வாறு கூறியுள்ளார்…
ஹாய் கௌரி, நல்லாத்தான் அறிமுகம் கொடுத்திருக்கீங்க..
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி விமலஹரன்.. :)
Ramanc இவ்வாறு கூறியுள்ளார்…
கற்பனைக்கு தடைக்கல் வேண்டாம். இந்த முயற்சி இவ்வளவு காலமும் இருந்த தடைக்கல்லுகேல்லாம் முடிவுக்கல்லாக இருந்து. எம்மண்னை உலகம் திரும்பி பார்க்கும் விஞ்ஞானத்தின் விளைபூமியாக்குவோம்.
ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
Bond is back!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)