பதினாறு வயதினிலே
தலைப்பை பாத்தவுடனே பதினாறுவயசு ஸ்ரிதேவிதானே உங்க கண்முன்னாடி வெள்ளைப் பாவாடை தாவணில " செந்தூரப் பூவே செந்தூரப் பூவே " எண்டு பாடிக்கொண்டு ஓடிவருவா இல்லையா? ஆனா நாம கொஞ்சம் புதுசா யோசிச்சு திரிஷாவ கொண்டுவந்து போட்டிருக்கிறம். அது எப்படின்னு பாக்கிறத்துக்கு முதல்லை... நாமெல்லாம் பதினாறு வயதிலை என்னத்தை கிழிச்சிட்டிருந்தம் எண்டு கொஞ்சம் rewind பண்ணிப் பாப்பமா..? இற்றைக்கு சுமார் பதினைந்து வருடங்களின் முன்பு ஒரு நாள்.. வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. அப்பெல்லாம் வாரம் ஒருமுறை உடல் பயிற்சி பாடம் இருக்கும். பக்கத்திலை இருக்கிற சர்ச் முன்றலில் (இப்போ Laughs இருக்கிற இடம் என்று நினைக்கிறேன்) தான் செய்வோம். அப்போதான் தாவணிக் கனவுகள் மாதிரி நம்ம "sweet sixteen" பற்றி பேச்சு வந்தது. நாம அப்பெல்லாம் பெரிதாய் கதைக்க மாட்டோம் (இப்பவும் தான். நம்புங்க ப்ளீஸ்..) ஆனாலும் அன்னிக்குத்தான் புதிதாய் இந்த சொற்பதத்தைக் கேள்விப்பட்டதால் கொஞ்சம் ஊன்றி அவர்களின் உரையாடல்களை கவனிக்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் இளமை, கனவுகள், பசங்க அப்பிடி இப்படி எண்டு அந்த