நான் யார்?
சிலநேரம் வாழ்க்கை பயணத்தில், "நான் யார்? எனது உண்மையான அடையாளம் என்ன?" என்பது போன்ற கேள்விகள் எமது மனதில் என்றோ ஒரு நாள் ஏற்பட்டிருக்கும். இதுவரை இல்லாதுவிடினும் கூட, இறுதியில் என்றோ ஒருநாள் நிச்சயமாக ஏற்படத்தான் போகிறது. பலரைப் போலவே எனக்கும் இத்தகைய தேடல்கள் சிறுவயதிலேயே ஏற்பட்டிருப்பினும் அதற்க்கான தெளிவான பதில் இதுவரை கிடைத்திருக்கவில்லை. அதனாலேயே தான் எனது profileஇல் கூட 'என்னைப் பற்றி' என்ற இடத்தில் "அடையாளத்தைத் தொலைத்தவள்" என்று போட்டிருந்தேன். பல சமய நூல்களையும், தத்துவ புத்தகங்களையும் படிக்கும் போது சில சமயங்களில் விடை தெரிந்தது போலிருக்கும், ஆனால் ஒருசில நாட்களிலேயே மீண்டும் குழப்பம் ஆரம்பித்துவிடும். "நான் யார்?" என்பதற்கு ஒரு சிலர் ஆத்மா என்றார்கள். நாத்திகர்களோ நாம் வெறும் இத்துப்போன சரீரம் மட்டுமே என்றார்கள். அதில்வேறை ஆயிரக்கணக்கான சமயங்கள், தத்துவங்கள் போலவே நாத்திகர்(Theist) என்பதில் கூட "கடவுள் நம்பிக்கை இல்லாதவர்(Atheist)", "கடவுளை என்றுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என நம்புபவர்(Agnostic)"...