கன்னியும் கண்ணீர்ப் பூக்களும்

இதுவரை பாடல்களை மட்டுமே "வெட்டிவேலை" என்ற தொகுப்பின் கீழ் கிறுக்கின்டிருந்த நான், ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுதுவதென்பது இதுவே முதல் தடவை. ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை என்று புத்தி ஒருபுறம் எச்சரித்துக் கொண்டிருப்பதையும் மீறி இதை எழுதுகிறேன் என்றால் அதற்க்கு ஒருகாரணம் இருக்கிறது. அவள் தான் "சோமாலியத் தாய்" 

வெளியில் இவ்வளவு காற்றிருக்க 
எண்டா மகனே எனது முலையில் வாய்வைத்துக் 
காற்றைக் குடிக்கிறாய் 

ஏனடா அழுகிறாய்
சத்தியமாய்த் தெரியாது எனக்கும்
தாய்ப்பாலின் சுவை என்னவென்று 
ஏனென்றால் 
உன் பாட்டியின் முலைகளுடன் 
பாலுக்காய்ப் போராடித் 
தோற்றுப் போனவள் நான். 

சென்ற மாதம் ஹிமலாயா கிரியேசன்ஸ் ஒழுங்கு செய்திருந்த "ignite" நிகழ்வில் வளர்ந்துவரும் இளம் பாடலாசிரியர், கவிஞன் என அறிமுகப்படுத்தப்பட்ட உமாகரன் மேடையேறியபோது சில முகங்களில் தெரிந்த ஏளனம் "சோமாலியத் தாய்" என்ற இந்தக் கவிதையை அவன் வாசித்து முடித்ததும் ஆச்சரியத்தினால் வாய் பிளந்து நின்றது. ஒவ்வோர் வார்த்தைகளும் வாளாய் வந்து இதயத்தில் பாய்ச்சிச் சென்றது. பதினெட்டே வயது நிரம்பிய, அதனைவிடவும் குறைத்தே காட்டும் குழந்தைத்தனமான முகம் கொண்ட ஒருவனிடம் அவனின் கவிதைகளில், சிந்தனைகளில் இத்தகைய முதிர்ச்சியை நிச்சயமாய் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த வளர்ச்சிப் படியின் அடுத்த கட்டமாக சில தினங்களுக்கு முன் கன்னி, கண்ணீர்ப் பூக்கள் என்று ஒரேசமயத்தில் இருவேறுபட்ட களங்களில் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தனது எழுத்து ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார். விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் செல்ல முடியாவிடினும், ஓர் வளர்ந்துவரும் கவிஞனின் முதலாவது தொகுப்பின் சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டதையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது.

கண்ணீர்ப் பூக்களின் அத்தனை கவிதைகளுமே அருமை. கன்னியில் வயதானவர்களின் நினைவு மீட்டல்களையும், ஆதங்கங்களையும் கூட அங்கங்கே தூவியிருக்கிறார். துசிகரன் சிறப்பாகவே இந்நூலை தொகுத்துக் கொடுத்திருக்கிறார். சிருங்காரத்தையும் சிரிப்பையும் ஒன்று சேர்த்துக் கொடுப்பது உமாவிற்கு நன்றாகவே வருகிறது. உதாரணத்துக்கு ஒரு வயதான ஐயாவினது ஆதங்கத்தைப் பாருங்கள்.

இன்றும் நீ சமைக்கும் வேளை
பின்னால் வந்து செல்லமாய் 
உன் இடுப்பைக் கிள்ளத்தான் ஆசை 
பாவம் நான் 
கை நடுக்கத்தில் அடுப்பைக் கிள்ளினால்..?

இப்படிப் பல முத்துக்கள் இருக்கின்றன. இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தது அவள் (ஒரு அங்கவர்ணனை) என்ற கவிதையே. 
.......
........
வெண்ணிற வானத்தின் 
கருநிற நிலாக்கள் 
அவளின் கண்மணிகள் 

நுரையீரல்த் தீவுக்கு 
யாத்திரை செல்லும் 
காற்றின் நுழைவாயில் 
அவள் மூக்கு 

என்பதாய் நீண்டு செல்லும் வர்ணனைகள் சற்றே வித்தியாசமான பாணியில் அமைந்திருந்தது.

நிற்க, கவிஞர் T-shirt இனால் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போல தெரிந்தது. பல இடங்களில் கண்மண் தெரியாமல் கிழித்து விட்டிருக்கிறார்.

உமா ஒரு கவிஞன் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடலாசிரியனும் கூட என்பதை நிரூபிப்பதற்கு JPL பாடல் வரிகளே போதும்.


JPL ஆரம்பமாச்சா PILOT க்குச் சொல்லு
நம்மாளு அடிப்பான் SIXER FLIGHT ஐப் பார்த்து ஓட்டு
KEEPER தான் புயலாய் ஆனான் UMPAIRE க்குச் சொல்லு
OFFSIDE BOUNDARY கூட அவன் பாஞ்சே தடுப்பான் பாரு
மின்னல் போகும் வேகம் உன் கண்கள் பார்த்தது உண்டா?
நம்ம SPEED BOWLER போடும் வேகம் அந்த மின்னல் பார்த்திருக்காது




கவிஞரைப் பற்றி எழுதுமிடத்து ரெ. துவாரகன் 'கன்னி'யில் சொல்லியதுபோல்.. 

இவன் கவிதைகளால் காதலிக்கிறான், அரசியல் செய்கிறான், புரட்சி செய்கிறான், தீவிரவாதம் செய்கிறான், வாழ்வியல் சொல்கிறான்.
இவனைக் கவிஞன் என்பதா? இல்லை...









கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
tanks akka,...........................
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
thanksssssssssssss akka

uma

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)