சுவர்க்கமும் நரகமும்
சுவர்க்கம், நரகம் என்பதில் எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலான மதக் கோட்பாடுகளில் இவையிரண்டும் நிச்சயமாகவே இடம்பெற்றிருக்கும். சொர்க்கத்தில் சிங்கமும் ஆடும் ஓடையில் ஒன்றாய்ச் சேர்ந்து நீரருந்தும் என்றும் நரகத்தில் எண்ணைக் கொப்பரைக்குள் போட்டு எடுப்பார்கள் என்றும் சொல்வார்கள். இப்படிப் பல்வேறு கதைகளைப் பலகாலமாகவே அறிந்திருந்தாலும் இவ்விரண்டிற்கும் நமக்கும் எதுவித சம்பந்தமுமே இருப்பதாய் இதுவரை உணர்ந்ததில்லை. சுவர்க்கமோ எதுவோ அதுபாட்டுக்கு இருந்திட்டுப் போகட்டுமே எண்டு தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலுமே நரகம் மட்டும் இந்த பூமியை விட கொடூரமாய் இருக்காது என்பது உறுதியாய் தெரிந்தது. ஏனெனில் அங்கெல்லாம் செய்த தவறுக்குத்தானாம் தண்டனை கொடுப்பார்கள். ஆனால் இங்கோ யார்யாரோ செய்ததெல்லாம் யார்யாரோ தலையில் போய்விழுகிறது. சத்தியத்தைப் போலவே மௌனம் என்பதும் ஓர் வலுவான ஆயுதம் தான், ஆனால் அது இங்கே கோர்ட்டில் கூட குற்றவாளி என்றே தீர்வாக்குகிறது. வாயுள்ளவன் பிழைத்துக் கொள்வான். அது வெள்ளைச் சட்டை மஞ்சள் சால்வை எண்டால...