ஹிமாலயா கிரியேசன்ஸ்
பல தசாப்த காலமாக யுத்த மேகங்களால் சூழப்பட்டிருந்த யாழ் மண்ணிலிருந்து சற்றே நம்பிக்கையின் கீற்று தூரத்தே தெரிந்தாலும் இத்தகையாதொரு தரம் வாய்ந்த படைப்பு இவ்வளவு சீக்கிரமாய் வருமென நிச்சயமாக யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
முதன் முதலாய் யாழ் மண்ணில் நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டுமென்ற எனது எண்ணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது எல்லோருமே என்னை வினோதமாய்ப் பார்த்தார்கள். "யாழ் மண் இன்னும் அதற்க்கு தயாரில்லை", "ஒரு தனியார் நிறுவனத்தை நடாத்துவதற்கு தேவையான போதிய வளங்கள் எதுவும் அங்கே இல்லை" என்று பல அறிவுரைகள் வெகு சரளமாகவே எல்லாப் பக்கத்திலிருந்தும் வந்து குவிந்தன. அதிலுமே யாருமே எதிர்பாராதவாறு விளம்பர நிறுவனம் ஒன்றை உருவாக்கியபோது "யாழில் பெரிய நிறுவனங்களே இல்லையாம், பிறகு யாருக்கு போய் விளம்பரம் செய்யப் போகிறீர்கள்?" என்றே கேள்வி எழுந்தது. இதற்க்கான பதில் எனக்குமே தெரிந்திருக்கவில்லை. இருந்தும் எதுவோ ஓர் நம்பிக்கை.. கூட இருந்தவர்களின் திறமையில்.. அவர்களின் உழைப்பில்.. எமது கனவுகளில்..
முதன்முதலாக ஹிமலாயா குழுவினரை சந்தித்தபோது எனக்குள் துளிர்த்த நம்பிக்கை இன்று வரை வீண்போகவில்லை. அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள், சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது ஒவ்வோர் கண்களிலும் தெளிவாகத் தெரிந்தது. சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது சாதனையாகாது. அது புத்திசாலித்தனம். சந்தர்ப்பங்களை நாமே உருவாக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் எவனொருவன் எதிர்காலத்தை நிகழ்காலத்தில் உருவாக்குகிறானோ அவனே காலத்தை வெல்கிறான். அந்த வகையில் விளம்பர துறையை யாழ் மண்ணில் முதன் முறையாக வேறொரு பரிணாமத்துக்கு இட்டுச் சென்றது "ஹிமலாயா கிரியேசன்ஸ்" தான் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். காணொளி விளம்பரம் என்றால் வெறுமனே கடையை மட்டும் சுத்திக் காட்டுவது என்ற ஒரு மனோபாவத்திலிருந்தவர்களிடம் போய் Concept, Storyboard என்றெல்லாம் நாம் பேசியபோது பெரும்பாலோனோர் நிறையவே குழம்பிப் போனார்கள். அதிலும் சிலர் கடையை ஒரு தடவையாச்சும் சுத்திக் காட்டியே ஆகவேண்டும் என அடம் பிடித்தனர்.
கொள்கைக்கும் நடைமுறைக்குமிடையேயான இடைவெளியில் இவ்வாறு ஊசலாடிக்கொண்டிருந்த வேளையில் தான் யாழின் பிரபல திருமண அழைப்பிதழ் நிறுவனமான விவாஹாஸ் இனது தலைவர் பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டு முதன் முதலாக பணத்தைக் கட்டுவதற்கு சம்மதித்தார். அதுவரை எல்லோர் மனதிலும் ஒரு மூலையில் எண்ணங்களாய் மட்டுமே தேங்கியிருந்தவை அசுர வேகத்தில் செயல்வடிவங்களாகத் தொடங்கிய போது பல புதிய சிக்கல்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. அதிலும் குறிப்பாக பெண் மாடலாக நடிப்பதற்கு யாழில் யாருமே தயாராகவில்லை. தயாராகவிருந்தவர்களோ இதற்க்கு சரிவரப் பொருந்தவில்லை. தெரிந்தவர் அறிந்தவர் மூலமெல்லாம் கேட்டாயிற்று. பலன்தானில்லை.
சடுதியாய் யாருமே எதிர் பார்க்காத வகையில் கொழும்பிலிருந்து பிரபல்யமான இரு பிறமொழி மாடல்களை வரவைத்து இரண்டே நாட்களில் தரமான மூன்று விளம்பரங்கள் செய்து முடிக்கப்பட்டன. அப்போது நான் Singaporeஇல் இருந்தேன். இயக்குனர் நிஷாகரன் தான் போன் பண்ணி "அக்கா, மாடல்களுக்கு மட்டுமே இவ்வளவு செலவாகும். என்ன செய்வது?" என்று கேட்க "பரவாயில்லை. ஆனால் அதற்க்கு ஏற்ற மாதிரி output உங்களால் கொடுக்க முடியும் எண்டு நம்பிநீங்கள் எண்டால் தாராளமாய் கூப்பிடுங்கள்" என்றேன். அந்த நம்பிக்கை வீண்போகாதமாதிரி சுதர்ஷன், துஷி மற்றும் பிருந்தாவின் பூரண உதவியுடன் தரமான மூன்று படைப்புகளைக் கொடுத்துவிட்டார்.
அடுத்து dubbing செய்ய வேண்டும். யாரைப் பிடிப்பது? இங்கு professional dubbing ஆர்டிஸ்ட் என்று சொல்லுமளவுக்கு யாருமில்லை. அதில் வேறை யாழ்பாணத்தமிழ் எண்டாலே இப்படித்தான் இருக்கும் எண்டு தென்னாலி உட்பட பல படங்களில் ஒரு trendஐயே உருவாக்கிவிட்டிருன்தனர். அதை மீறிப் போக முடியுமா முடியாதா என்பதை விட இது யாழில் மட்டுமல்லாது பிற நாட்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படவுள்ளது. எனவே எல்லோரையுமே சென்றடையும்படியாக தயாரிக்க வேண்டுமென்பதே எமது பிரதான நோக்கமாக இருந்தது.
ஒருவாறாக நமக்கு நெருக்கமான சிலரைப் போட்டு Dubbing முடித்தாயிற்று. மியூசிக் பற்றி சொல்லவே தேவையில்லை. நாம் எள் என்றால் எண்ணையையே கொண்டுவரும் ஆற்றல் மிக்க வளர்ந்துவரும் இளம் composer சுகன்யன் எமக்குக் கிடைத்தது கிட்டத்தட்ட ஒரு வரம் போலத்தான். அதில்வேறை ரெகார்டிங் இடைநடுவில் keyboard பழுதாகிவிட இதற்கெனவே கொழும்பு சென்று இரண்டு லட்சம் ரூபா செலவில் ஒரு புது keyboard வாங்கி வந்து முழுமூச்சாய் செய்துமுடித்தார். இவரது பாடல் ஒன்று iTune இலும் உள்ளது. S Sukanyan (suga) என்று தேடிப் பார்த்தால் கிடைக்கும்.
இறுதியாய் இந்த விளம்பரத்தில் சற்றும் பிரதிபலன் எதிர்பாராமல் உதவிசெயதோர் நிறையப்பேர். முறைக்கும் அவர்கள் ஒவ்வொருவராய் பெயர் போட்டு நன்றி சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் எல்லோரும் அதையும் தாண்டி நட்பு என்ற ஒரு வட்டத்துக்குள் வந்து விட்டதனால் அவற்றை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன். இருந்தும் முடிந்தளவு அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக எழுதுவதற்கு முயற்ச்சிக்கிறேன்.
அடுத்து எமது நிறுவனத்திலிருந்து தமிழ் மொழியின் பெருமை பேசும் வீடியோ பாடல் ஒன்று வரவிருக்கிறது. இதன் directionஇல் சிவாராஜ் பிரதான பங்கு வகிப்பார். ஆவலுடன் எதிர்பாருங்கள்.
கருத்துகள்