ஹிமாலயா கிரியேசன்ஸ் 2
"இப்ப கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?" மனைவி கேட்கும்போதே கணவனுக்கு அடிவயிற்றில் புளிகரைத்தது போலாகிவிடும். வேறென்ன? எங்கே தன்னையும் கூட்டிக்கொண்டு போகச் சொல்லிவிடுவாளோ எண்டு தான்.. :) செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. என்பதெல்லாம் அந்தக்காலம். நீ ஆஸ்திரேலியா போறியா நான் ஸ்ரீலங்கா போறன். இது இந்தக் காலம். காலம் ரொம்ப மாறிப்போச்சுது இல்லை? எதிலும் வேகம். ஒரு ரெண்டு நிமிடம் நிண்டு நிதானமா துக்கப்படவோ வருத்தப்படவோ நேரமில்லை. பல சமயங்களில் அதற்க்கான அவசியங்களும் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன. சரி இப்ப நாம ஸ்டோரிக்கு வருவம். "இது எண்ட லைப்ஐயே மாற்றப்போற மீட்டிங்" என்று ஒருவழியா அவசர அவசரமாய் விடை பெற்ற கணவன் போற அவசரத்திலை இதயத்தை விட்டிடு போறத்துக்கு பதில் பைல்ஐ விட்டிடு போட்டார். ரொம்ப இம்போர்டன்ட் டாகுமென்ட்ஸ் எண்டு ஒரு மாசமா பாத்து பாத்து சேர்த்து வைத்தது. அப்பிடி லப்டோப்ல ஸ்கேன் பண்ணி கொண்டுபோக முடியாம என்ன திரவியமோ? இரவிலை தலாணிக்கு கீழை வைச்சுப் படுக்காத குறை. போன் பண்ணி கேக்கலாமேண்டால் ஒரே Engaged. மனுசிய விட்டு பிரிஞ்ச