ஹிமாலயா கிரியேசன்ஸ் 2
"இப்ப கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?"
மனைவி கேட்கும்போதே கணவனுக்கு அடிவயிற்றில் புளிகரைத்தது போலாகிவிடும். வேறென்ன? எங்கே தன்னையும் கூட்டிக்கொண்டு போகச் சொல்லிவிடுவாளோ எண்டு தான்.. :)
செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
என்பதெல்லாம் அந்தக்காலம். நீ ஆஸ்திரேலியா போறியா நான் ஸ்ரீலங்கா போறன். இது இந்தக் காலம். காலம் ரொம்ப மாறிப்போச்சுது இல்லை? எதிலும் வேகம். ஒரு ரெண்டு நிமிடம் நிண்டு நிதானமா துக்கப்படவோ வருத்தப்படவோ நேரமில்லை. பல சமயங்களில் அதற்க்கான அவசியங்களும் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன.
சரி இப்ப நாம ஸ்டோரிக்கு வருவம்.
"இது எண்ட லைப்ஐயே மாற்றப்போற மீட்டிங்" என்று ஒருவழியா அவசர அவசரமாய் விடை பெற்ற கணவன் போற அவசரத்திலை இதயத்தை விட்டிடு போறத்துக்கு பதில் பைல்ஐ விட்டிடு போட்டார்.
ரொம்ப இம்போர்டன்ட் டாகுமென்ட்ஸ் எண்டு ஒரு மாசமா பாத்து பாத்து சேர்த்து வைத்தது. அப்பிடி லப்டோப்ல ஸ்கேன் பண்ணி கொண்டுபோக முடியாம என்ன திரவியமோ? இரவிலை தலாணிக்கு கீழை வைச்சுப் படுக்காத குறை. போன் பண்ணி கேக்கலாமேண்டால் ஒரே Engaged. மனுசிய விட்டு பிரிஞ்சாலும் பிரிவான்கள், ஆனா இந்த கண்டறியாத போன மட்டும் எப்பபார் கொஞ்சிக்கொண்டு இருப்பாங்கள். வேற வழி??
ஷ்ஷ்ஷ்... அருள் குளோபல் எக்ஸ்பிரஸ்.. உங்கள் பொதிகளை உலகின் எப்பாகத்திற்கும்.. அதிவிரைவு சேவைமூலம் அனுப்பிவைக்க..
"Did you Receive the File, Darling?" மனுஷன் போய்ச் சேந்தானா இல்லையா எண்டில்லை.. என்னா ஒரு ரொமாண்டிக் மெசேஜ்..
வாகீசண்ட அந்த கடைசி சிரிப்பு ஒரு trade மார்க் தான். அது மனுசிண்ட கெட்டிக்காரத்தனத்தை நினைத்தா.. இல்லாட்டி கீர்த்தி சொன்ன மாதிரி அப்பாடா ஒரு மாதிரி எஸ்கேப் ஆயிட்டம் எண்டா தெரியலை.
இந்த விளம்பரத்தில் அனைத்துவிதத்திலும் ஒத்துழைத்தவர் பலர். அதில் முதலாவது பதிவில் வந்தவர்களை விட அதிமுக்கியமாய் ஒரு சிலரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது எடிட்டிங். இரண்டு மணி நேரத்துக்குள் அவசர அவசரமாய் செட் பண்ணி பிளான் பண்ணி சாதா கமெராவால் எடுக்கப்பட்ட framesஐ மட்டுமே வைத்துக்கொண்டு தனக்குத்தெரிந்த அத்தனை நுணுக்கங்களையும் பயன்படுத்தி உலகத் தரத்திற்குக் கொண்டுவருவதற்கான அத்தனை முயற்ச்சிகளையும் இரவுபகல் பாராது செய்த திரு.துசிகரன் அவர்களினது உழைப்பு நிச்சயமாய் ஆச்சரியப்பட வைக்கிறது.
அடுத்து எப்போதும் போலவே சுகன்யன் இந்த முறையும் நிறையவே சிரத்தை எடுத்திருக்கிறார். அத்துடன் எக்ஸாம் எண்டு கூடப்பாராமல் நேரத்தை ஒதுக்கி தனது கருத்துக்களையும் சில இசையமைப்பு நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்ட சுதர்ஷன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். இன்னும் சில மாதங்களில் இசை சம்பந்தமான உயர்கல்விக்கு தென்னிந்தியா பயணிக்கவிருக்கும் எமது இசையமைப்பாளர் சுகன்யனுக்கு எமது நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அதற்கேற்ப இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன யாழ் சேவையில் (யாழ்FM) முக்கிய அறிவிப்பாளர்களில் ஒருவரான PX.கலிஸ் அவர்களும் "வாடா போடா", "புழல்", "அழுக்கன் அழகாகிறான்" போன்ற தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியவருமான "சிலோன் ஜெகனி" அவர்களும் இம்முறை தமது இனிய குரல்களால் விளம்பரத்திற்கு மெருகூட்டியிருக்கின்றனர்.
நாம் எம்மாலியன்ற எமது சிறந்த படைப்பை முன்வைக்க விரும்பும் போது, அதற்காய் நம்மை சார்ந்தோரும் தம்மாலியன்ற முழு ஆதரவையும் தந்து கூடவே நின்றுளைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி எல்லையற்றதே.
முதல் முறையாய்.. பணம் சேர்க்கிறமோ இல்லையோ ஆனால் நல்ல மனிதர்களை சேர்த்திருக்கிறோம் என்ற ஒரு திருப்தியைத்தந்த படைப்பு இது.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.
கருத்துகள்
#கிறியேஷன்ஸ்
துவாரகனும் அவர் பரிவார வானரங்களும் முந்தி செவ்வேள் சேர்க்கு வால் பிடிச்சு கொண்டு திரிஞ்சு இப்ப அவர் துரத்தி விட்டவுடன அடுத்தாள பிடிச்சிருக்கினமாம்
ஊரை ஏமாத்துற கூட்டத்துக்கு இமய மலையிண்ட பெயர் வேற
பிரம்மகுமாரியள் எண்டுறதுக்கு பதிலா பிரம்மசத்தியள் எண்டு சொல்லுறது தான் பொருந்தும்.