நானுமொரு ரசிகை தானுங்கோ
தொடங்கி ஒருவருடம் ஆகப் போகிறது இன்னும் 75 பதிவுகள் கூடத் தாண்டவில்லை தான். ஆனாலும் ரசனைகள் ஒன்றும் தீர்ந்து போய்விடவில்லை. இளையராஜாவின் "How to name it" இல் ஆரம்பித்தது இன்று நீ தானே என் பொன் வசந்தத்தில் வந்து நிற்கிறது. இத்தனைக்கும் நான் ஒன்றும் இளையராஜாவின் தீவிர ரசிகை இல்லை. இருந்தும் எதுவோ ஒன்று இன்னும் அவரை ரசிக்க வைக்கிறது. ஜேகே அளவுக்கு கம்போசிசனை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேயத்தெரிந்திருந்தால் ஒருவேளை கண்டு பிடித்திருக்கலாம்.
நீந்தி வரும் நிலாவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பார்வையின் முகவரிகள்
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
பலமாதங்களின் பின்பு எதிர்பாராதவிதமாய் Singaporeஇல் ஓர் இனிய சந்திப்பு.
தத் திரிகிடதக தித் தரிகிடதக தொம் தரிகிடதக நம் தரிகிடதக
முதன் முதலாக என்னையும் தில்லானா பாட(வாசிக்க?)வைத்த பெருமை மேதகு. ராமவர்மா அவர்களையே சேரும். கோடானுகோடி நன்றிகள்.
அறிமுகம் செய்யும்போது
"He is a descendant of Maharaja Swathithirunaal" என்று சொல்ல
ஓர் இளவரசராக இருந்தும் என்ன ஒரு தன்னடக்கம், இனிமை.
Chicagoவின் பின்னர் அண்மையில் நடனம் சார்ந்த ஒரு நிறைவான படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது "Step up (4) Revolution".
Roxie or Emily? Ananthan's vote goes to Chicago.. mine..? hmm..
"Who Ever Guys you are.. We Love you so much.."
நாமளே ஒரு ரசிகை.. நமக்கே ஒரு ரசிகையா..?
இருந்தாலும் ஹன்சிகா படமெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
நிற்க, இந்த accountக்கும் எனக்குமோ அல்லது Himalaya Creations Pvt Ltd இற்குமோ எவ்வித சம்பந்தமுமில்லை என்பதை தாழ்மையுடன் அறியத்தருகிறேன்.
சில வரிகள் சம்பந்தமே இல்லாமல் நெஞ்சைக் கீறிச் செல்லும். அந்தவரிசையில் நம் நாட்டிலிருந்தும் காரசாரமாய் சில வரிகள் வர இருக்கிறது.
இருந்தும் ஏனோ என்னை என்றுமே கொன்று செல்வது இன்றுவரை பாரதி மட்டும் தான். பல நேரங்களில் அதற்க்கு மருந்திட்டுப் போவோர் மார்ட்டினும் மரியாவும் தான். ஆனால் இப்போதெல்லாம் ஏனோ எதுவுமே மனத்தைக் காயப்படுத்துவதில்லை.
ஒருமலை, ஒருநதி, கூடவே.. தவிர சுவர்க்கத்தைப் பற்றிய கனவுகள் என்றுமே என்னிடம் இருந்ததில்லை. இருந்தும் இணையத்தைக் காதலிப்பவர்களுக்கு, முகப்புத்தகத்தை ரசிக்க முடிந்தவர்களுக்கு நிச்சயமாய் Blisla ஒரு வரப்பிரசாதமாய் இருக்கும்.
இறுதியாக, தென்னிந்திய சாயலிலேயே விளம்பரங்களை எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் சற்றே வித்தியாசமான எமது முயற்சியை வரவேற்ற அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
"When a man lives with thousands of shoulds and should-nots he cannot be creative." - Osho

"Yah. that's why my music knowledge is also much descendant" என்றார் பணிவுடன்..

கருத்துகள்
அந்த விளம்பர ஐடியா கிளாஸ் ... என்னதான் நீங்க சொன்னாலும் cinematography இல ராஜீவ் மேனன் எட்டிப்பார்க்கிறான். Its a complement of-course!
டப்பிங் .. மற்றும் மேக்அப் .. அடுத்துவரும் படங்களில் இன்னமும் கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//டப்பிங் .. மற்றும் மேக்அப் .. அடுத்துவரும் படங்களில் இன்னமும் கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன்.// நிச்சயமாக.. எடுத்துக் கூறியமைக்கு நன்றி