ஹிமாலயா கிரியேசன்ஸ் 3
சில நிகழ்வுகள் எதற்காய் நடக்கின்றன என்பது பலசமயம் புரிவதில்லை. அதிலும் எறும்புகளாய் ஊர்ந்துகொண்டிருக்கும்போது முன்னாலிருக்கும் இரை மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதுவே ஒரு பறவையாய் வானிலுயரப்பரக்கும்போது எல்லாப்புள்ளிகளும் ஒன்று சேர்ந்து ஓர் அழகிய ஓவியமாய்த் தெரியும். தெரிந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதை சரியான முறையில் செதுக்கி எடுப்பதற்கு ஒரு திறமையான டீமும் தேவை.
அதிலும் இந்த விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கான்செப்ட் (Concept) எடுப்பதென்பது மிகவும் சிரமம். ஒருகட்டத்தில் கான்செப்ட் இல்லாமலே செய்வோம் என்று முடிவெடுத்து rough-cut உம் முடித்தாயிற்று. அதைப்பார்த்துவிட்டு திருவாளர் அனந்தன் சொன்னவை, இனி இந்த ஜென்மத்தில் கான்செப்ட் இல்லாமல் செய்வோம் என்று ஒருபோதுமே எம்மை நினைக்க வைக்காது.
கம்பெனி பெயரையும் குறையவிடக்கூடாது அதே சமயம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்பவும் கொடுக்க வேண்டும். அந்தவகையில் நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின் இறுதியாய் ஒருவாறு முடித்து அனுப்பி தற்போது சிங்கப்பூர் Sony Entertainment Television இல் மிகவும் பிரபல்யமான Kaun Banega Crorepati (KBC) ஷோவில் Hariraya தினமான நேற்று முன்தினம் தொடக்கம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதிலும் இந்த விளம்பரத்திற்காக கொடுக்கப்பட்ட படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கான்செப்ட் (Concept) எடுப்பதென்பது மிகவும் சிரமம். ஒருகட்டத்தில் கான்செப்ட் இல்லாமலே செய்வோம் என்று முடிவெடுத்து rough-cut உம் முடித்தாயிற்று. அதைப்பார்த்துவிட்டு திருவாளர் அனந்தன் சொன்னவை, இனி இந்த ஜென்மத்தில் கான்செப்ட் இல்லாமல் செய்வோம் என்று ஒருபோதுமே எம்மை நினைக்க வைக்காது.

இவ்விளம்பரம் பலரது கவனத்தையுமே இந்த குறுகிய நேரத்தில் கவர்ந்து நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிக பாராட்டைப் பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஒருவழியாக ஹிமாலயா கிரியேசன்ஸ் தற்போது வெற்றிகரமாய் சிங்கப்பூர்இல் காலடிவைத்திருக்கிறது. இன்னும் பல படைப்புகள் தொடர்ந்து துரித கதியில் வரவிருக்கின்றன. இந்த நேரத்தில் எமது வளர்ச்சியில் உறுதுணையாயிருக்கும் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள்