இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹிமாலயா கிரியேசன்ஸ் 5

படம்
"பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?" என்று ஒருவழியா மாயன்களிடமே கடன்வாங்கி ஒரு ஸ்டோரிபோர்ட் கொண்டுபோனா.. "இது ஓகே . ஆனா எனக்கு பஞ்சாங்க காலண்டருக்கு நிறைய importance குடுக்கணும். எனவே தனியாக வேறையா அதுக்கு இன்னொரு விளம்பரம் செய்யுங்க" என்றார். மெய்கண்டான் காலண்டர் எண்டு கேள்விப் பட்டிருகிறோம், ஆனால் யாரு எழுதுறா.. யாரு அடிக்கிறா என்று தெரியாததால் மெய்கண்டான வைத்து google பண்ணிப் பார்த்ததில் மெய்கண்டான் ஒரு சிவனடியார் எண்டு வந்துது. எனவே அவர் எழுதியிருக்க 99% வாய்ப்பில்லை. அப்பத்தான் சுஜன் அண்ணா சொன்னார் "கரிகணன் போன்று தான் மெய்கண்டான், அஷ்டலக்ஷ்மி போன்றவையும் பஞ்சாங்கத்தை வைத்துதான் அடிக்கினம். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்ற இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலண்டேரை பிரிண்ட் பண்ணி வெளியிடுறம் என்பது மக்களுக்கு தெளிவாக போய் சேரவேண்டும்" என்று.   இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் என்றவுடன் தான் பொறிதட்டியது. சிறுவயதுகளில் வாக்கிய பஞ்சங்கத்தின் முன்னால் அவரது பெயர் பெரிதாய் போட்டிருப்பது பார்த்

ஹிமாலயா கிரியேசன்ஸ் 4

படம்
வருடக்கடைசி நெருங்கிக்கொண்டிருக்கின்றது. FBயில் பலர் இப்போதே countdown தொடங்கிவிட்டார்கள். மாயன் காலண்டர் வேற உலகம் அழியப்போகுது என்று பெரும் பீதியக்கிளப்பிக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஒரு போன்கால்.. "தம்பி.. 2013 பிறக்கப்போகுது, எனக்கு எங்கடை கரிகணன் காலண்டரை வைத்து ஒரு விளம்பரம் செய்ய வேணும்".  ஆறடி உயரமும் முகமேதெரியாதளவுக்கு தாடியுமாக சட்சாத் அவர் வேறுயாருமல்ல, முதன் முதலாய் நமது குறிக்கோள்களைப் புரிந்து பாராட்டி தூக்கிவிட்ட கரிகணன் பிரிண்டர்ஸ் முதலாளி திரு.ராஜ்குமார் அவர்கள் தான். என்னா ஒரு நம்பிக்கை.. தன்னம்பிக்கை..   நாளை நடக்கப் போகும் ஒன்றிற்காய் இன்று நமது முயற்ச்சியை கைவிட்டுவிட்டு சும்மாயிருப்பது சுத்த மடைத்தனம் அல்லவா? அந்தவகையில் 2013 பிறக்குதோ இல்லையோ அவர்களுடைய வேலை பெரிய பெரிய கம்பனிகளுக்கு ஆர்டர் எடுத்து கலண்டர், டயரி அடிப்பது. எமதுவேலை விளம்பரம் செய்வது.. யாரோ சொன்னார்கள் உலகம் அழியப்போகுதுதாம் என்றுவிட்டு வெறுமனே இருந்துவிடமுடியாது தானே? அதால..  "பன்னிரெண்டோட முடிஞ்சிடுச்சா..? பதின்மூணு வருதில்லை..?" உங்க வாடிக்கையாளருக்கு என்

அடடே நாளைக்கு தீபாவளியில்ல?

படம்
ரசிகையின் முதல் பதிவு - புதன், அக்டோபர் 26, 2011  அடடே இன்னைக்கு தீபாவளியில்ல? அதுக்கு..  Thillakan  சொன்னது… இலவசம blog தாறன் எண்டதுக்ககாக 68 blog திறந்து வருசத்துக்கு ஒருக்க எழுதக்கூடாது ;) வாயில வரத தமிழ் எழுத்தில வருகுது :) 11:01 pm, அக்டோபர் 26, 2011  உண்மைதான் இன்றுவரை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு ப்ளாக் திறந்திருப்பேன். ஆனால் தொடர்ச்சியாக குறைந்தது மாதத்துக்கு ரெண்டு தடவையேனும் எழுத முடிந்தது இதில் மட்டும் தான். ஏனெனில் எழுதும்போது ஏனோ ஒருகட்டுக்குள் நின்று எழுதுவதென்பது என்னால் முடியாத காரியம். அந்த நேரத்தில் தோன்றுவது எதுவோ அதை அப்படியே எழுதி போட்டுவிடுவேன். திரும்பவும் பார்த்து திருத்துவதென்பது மிக மிகக் குறைவு.   ஒரு சிலர் சில பதிவுகளில் கேட்டிருக்கிறார்கள் 'இதன் மூலம் நீங்க என்ன சொல்லவாறீங்க' எண்டு. என்னதான் பேப்பர்ல போடும் அளவுக்கு ஏதோ கிறுக்கியிருந்தாலும்  சத்தியமா யாருக்கும் கருத்தோ அட்வைசோ என்று பண்ணுற அளவுக்கு நான் இன்னும் வளரலை.  அது மட்டுமல்லாது இங்கு எந்த இலக்கியமோ இலக்கணமோ இருக்காது. அதன்படி எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இதுவரை எழ

காடு பாலைவனமாகிறது

படம்
படித்ததும் (பிடித்ததும் ?!) அறிவுக்கெட்டியதும்..  முதல்ல இதைப் படிங்க.. காடு  பாலைவன மாகிறது  திறந்து கிடக்கிறது  By JK. முதன் முதலாக ஒரு விஷப் பரீட்சை.. அட நீ எழுதத் தொடங்கினதே அதுதானே என்பவர்கள் மட்டும் தைரியமாக மேலே வாசிக்கலாம்.. மற்றவர்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.. “நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?” சாதாரணமாகப் பார்த்தால் ஒரு மேலோட்டமான கேள்விதான். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பைத்தியம் பிடிக்க வைக்கும் கேள்வி. எங்கே தொடங்கியது, எங்கு சென்று கொண்டிருக்கிறது, இன்னும் எங்கே போய் முடியும் என்றெல்லாம் அறியமுடியாத கேள்வி இது. மேலும் மேலும் சிந்திதுகொண்டு போனால் 'சே நாம இத்தின்னாள் வரை பண்ணின்டிருன்தது காதலேயில்லை' என்றும் கூடத் தோன்றும். பின்பு காதல் பொய் என்று பேசவைக்கும். பின்பு திரும்ப 'அது காதலாய் இருக்ககூடாதா' என்று திடீரென அடிமனசில் ஓர் ஆசை கிளம்பும். சூடுகண்ட பூனை சற்றே யோசிக்கும். அடுப்பங்கரை கதகதப்பு சுகமாய் மீண்டும் ஓர் ஆனந்த சயனம், பின்பு திரும்பியும் சூடு வாங்கி.. வாங்கி.. சக்கரம் திரும்பவும் சுற்றுகையில்.. உணர்வுகள் படிப்படியாக அடங்கி இ

அறுபடும் காலம்

படம்
ஓர் வெளியில் ஓடும் எண்ணங்கள் புத்தி பிரிக்கின்றது வேறுவேறாய்.. புரியாதபுதிர்கள் புரிபடத்தொடங்க பல்லாயிரம் புதிர்கள் பின்னிற்கின்றன சங்கிலித்தொடராய் அடிகொடுத்து அடிவாங்கி அலுத்து எதற்கும் அர்த்தமில்லாது இருந்தாலும் எடுபடாது எதிலும் பிடிபடாது எத்தனை பரிமாணங்களில் எண்ணங்களின் பரிணமிப்புக்கள் வியக்க வெறுக்க விரட்ட எதுவுமில்லாது நாகத்தின் கடைசித் தலையும் அறுபடும் காலம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோவன்றி விடுபடும் உறவுகள் இறுதியாய் வேறென்னவேண்டும்? விரட்டவிரட்ட ஓடிய காலம்போய் கால்தேய காலம் பின்னால் இழுபட்டுவருகையில் இன்னும் எத்தனை தூரமென்று அதற்க்கும் தெரியாது என்னைப்போலவே..!