அறுபடும் காலம்


ஓர் வெளியில் ஓடும் எண்ணங்கள்
புத்தி பிரிக்கின்றது வேறுவேறாய்..

புரியாதபுதிர்கள் புரிபடத்தொடங்க
பல்லாயிரம் புதிர்கள் பின்னிற்கின்றன
சங்கிலித்தொடராய்

அடிகொடுத்து அடிவாங்கி அலுத்து
எதற்கும் அர்த்தமில்லாது இருந்தாலும்
எடுபடாது எதிலும் பிடிபடாது
எத்தனை பரிமாணங்களில்
எண்ணங்களின் பரிணமிப்புக்கள்

வியக்க வெறுக்க விரட்ட எதுவுமில்லாது
நாகத்தின் கடைசித் தலையும் அறுபடும் காலம்
கெஞ்சுதலோ கொஞ்சுதலோவன்றி
விடுபடும் உறவுகள்
இறுதியாய் வேறென்னவேண்டும்?

விரட்டவிரட்ட ஓடிய காலம்போய்
கால்தேய காலம் பின்னால் இழுபட்டுவருகையில்
இன்னும் எத்தனை தூரமென்று அதற்க்கும் தெரியாது
என்னைப்போலவே..!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)