இன்கிரடிபிள் இந்தியா (Incredible India)
2013 பிறக்கும் வரை எதுவுமே எழுதுவதில்லை.. பதிவுலகத்துக்கு சற்று விடுமுறை கொடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அதையும் மீறி எழுதவைத்தது சமீபத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட டெல்லி மாணவியின் மரணம். கடந்த சில வாரங்களாகவே பல அரசியல் பிரமுகர்கள், செய்தி நிறுவனங்களை மட்டுமல்லாது பதிவுலகையுமே சற்றே கொந்தளிக்க வைத்த நிகழ்வு. பொதுவாகவே பாலியல் வல்லுறவு என்பது எவ்வளவு மிருகத்தனமான செயல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்க்கான அடிப்படைக்காரணி யாரோ எங்கேயோ ஓரிரண்டு மனித மிருகங்களில் மட்டுமே இருப்பதல்ல. ஒவ்வொரு சராசரி மனிதனுக்குள்ளிருக்கும் இருக்கும் அரக்க குணத்தின் முற்றுமுழுதான வெளிப்பாடு ஒரு பெண்ணின்மீது காமம் கலந்து திணிக்கப்படுகையில் அது பாலியல் வல்லுறவாகிறது. This Photo was Shared on Fb by some indian friends என்னடா இது சாதாரண மனிதர்களும் அந்த மிருகங்களும் ஒன்றா என்று கோபப்படுபவர்கள் சற்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கயவர்களையுமே நல்லவர்கள், அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கு என்று வாதிடுவதர்க்காய் நாலு பேர் இருக்கிறார்கள்.. இல்லையெனின் இனிமேலாவது வரத்தான