அன்பென்ற மழையிலே
"உனக்கு என்ன வேணும் சொல்லு?" காரை மெதுவாக பிளாட்டின் கீழே நிறுத்திவிடு அவள் பக்கம் திரும்பி ஆசையாய் கேட்டபோது அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"தெரியலை"
ப்ளேயரில் Mariah Carey மாறி இப்போ மின்சாரக்கனவில் பிரபுதேவா கஜோலைக் கலாய்த்துக் கொண்டிருந்தார். நேரம் அதிகாலை இரண்டு மணியிருக்கும். சிறு வயதிலிருந்தே வேத பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இயேசு பிறந்தது 24 இரவா இல்லை 25 இரவா என்ற குழப்பம் இன்னும் அவளுக்கு தீர்ந்தபாடில்லை. இப்பிடித்தான் கார்த்திகை தீபத்தையும் தீபாவளியையும் கூட அடிக்கடி போட்டு குழப்பிக் கொள்ளுவாள். அவ்வளவெல்லாம் எதுக்கு சாதாரணமாய் இடது வலது சொல்வதற்கே கொஞ்சநேரம் பிடிக்கும். அதான் எதோ DRDயோ BRDயோ எண்டு சொல்லுவாங்கள். அதில்கூட குழப்பம் அவளுக்கு. இதனால் தானோ என்னமோ நல்லகாலமாய் மெடிசின் படிக்கவில்லை என்று அடிக்கடி நினைத்துக்கொள்ளுவாள். ஒருவேளை அப்பிடிப் படித்திருந்தால் இன்றைக்கு எத்தினை பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும்? ஹ்ம்ம்.. இப்ப மட்டும் என்னவாம்..? நீண்ட நெடிய பெருமூச்சொன்று வந்தது அவளிடமிருந்து..

"இன்னிக்கு Christmas. உனக்கு ஏதாச்சும் தரனும் போல இருக்கும்மா. ஆனா என்கிட்ட இப்ப இவ்வளவு தான் இருக்கு. உனக்கு பிடிச்சதை.." தயங்கித் தயங்கி ஒருவாறு சொல்லி முடித்த போது துடித்துப்போனாள். அவள் ஒரு வேசி என்று மறைமுகமாய் என்ன நேரடியாகவே சொல்லிவிட்டான். உதட்டை இறுக்க மடித்து வர இருந்த கண்ணீரை ஒருவாறு அடக்கிக்கொண்டாள்.
அவன் சொல்வதும் சரிதானே. நைட் கிளப், பீச், பார்ட்டி.. இன்று இவன், நாளை இன்னொருவன் என்றுதானே அவள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கு. என்ன இன்னும் கை நீட்டி காசு வாங்காதது தான் பாக்கி. அதற்கும் இன்று இவனே அடியெடுத்துக் கொடுத்துவிட்டான்.

"சாரி.. தப்பா எதுவும் பேசிட்டேனா?"
இல்லையென்று தலையாட்டினாள். அவள் மௌனத்தையே சம்மதமாக நினைத்து முன்னே அன்புடன் அரவணைப்பதற்கு தயாராய் தனதிருகரங்களையும் அகல நீட்டியபடி நின்றிருந்த மாதா உருவத்தின் அடியிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான். அவளுக்கு உலகமே தலை மீது இடிந்து விழுவது போன்றிருந்தது. இப்படியே செத்துவிட மாட்டோமா என்று தோன்றியது.
நீட்டிய கவரை ஏறெடுத்தும் பார்க்காது வெளியே வெறித்தபடி இருந்த அவளைப் புரியாமல் பார்த்தான்.
"இதில்லை.. உனக்கு வேறை என்ன வேணுமெண்டாலும் என்னை தயங்காமல் கேக்கலாம். ஆனா அவன் கூட மட்டும்.." சடாரென்று திரும்பியவள்... "ப்ளீஸ்.." குரல் முழுவதுமாய் உடைந்து போயிருந்தது. இன்னும் கொஞ்சநேரம் இருந்தால் அழுதுவிடுவோம் என்று தோன்றவே, "ஓகே நான் வாறன். Merry Christmas to you.." என்றபடி கார் கதவைத் திறக்கப் போனவளை தடுத்து "உனக்கு என்ன வேணும் என்று சொல்லிட்டுப் போ. என்னால முடிஞ்சதை.." என்றவனை இடை மறித்து,
"உங்களால தரமுடியாது.."
"நிச்சயமா. உனக்காக.. என்கிட்ட இருக்கிறது என்னவேனாலும் கேளு. ப்ளீஸ்.."
"ஐ நீட் லவ்.. ஜஸ்ட் லவ் ஒன்லி.. நதிங் எல்ஸ்.. உங்களால முடியுமா?"
அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலை குனிந்தான்.
அந்த மாயான அமைதியைக் கிழித்தபடி அந்தக் குரல்... சித்ராவினதோ.. அனுராதா சிறீராமினதோ..
"அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.."
"குட் நைட் டியர்.. சி யு லேட்டர்.." அவன் குரல் கேட்காத தூரத்தில் அவள் சென்றுகொண்டிருந்தாள்.
கருத்துகள்