அன்புள்ள வாசகர்களுக்கு

சமீபத்தில் ரசிகையின் நீண்டநாள் வாசகர் ஒருவரை தற்செயலாய் சந்தித்திருந்தேன். அவரையே அன்று தான் முதன் முதலில் சந்திக்கிறேன். ஆனால் அவர் "உங்களுக்கு எல்லாத்தைப் பற்றியுமே தெரிந்திருக்கே" என்று வியந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். என்னடா இது நம்ம பாட்டுக்கு என்னமோ கிறுக்கிட்டு இருக்கிறம் அதை வைத்து எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க எண்டு. அவரிடமே கேட்டுவிட்டேன். "இல்லை.. பொதுவாகவே இசை நடனம் கதை கவிதை என்று எல்லாமே எழுதிறீங்களே. அதுதான். கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு." என்றார்.

இற்றைக்கு சரியாக பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள். 1997/12 இருபத்தரோ இருபத்தேழோ என்று சரியாய் ஞாபகமில்லை.
"கௌரி. New Yearக்கு BMICHல ஒரு ப்ரோக்ராம் இருக்கு. பாடுறத்துக்கு ஆக்கள் தேவை. வரமுடியுமா?" என்று சாதாரண தரம் சித்தியடைவதர்க்காக ஒரேயொரு கீர்த்தனையை மூன்று மாதம் கஷ்டப்பட்டு ஓரளவு சரியாகப் பாடக் கற்றுத்தந்த எனது சங்கீத ஆசிரியை மினக்கட்டு போன் பண்ணி கேட்டபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. வயலினில் தத்தித் தத்தி எதோ சில நிகழ்ச்சிகள் செய்திருந்தாலுமே மேடையேறிப் பாட என்றுமே துணிந்ததில்லை. 

"டீச்சர். எனக்கு பாட வராது. வேண்டாம்." என்றேன் தயங்கியபடி. 
"பாரதி பாட்டுதான். ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து பாடுகினம். நீரும் அவையோட சேர்ந்து பாடினா சரி." என்றபோது அப்பாடா என்றிருந்தது. தவிர பாரதி என்றதும் வேறெதையுமே யோசிக்கவில்லை சரி என்றுவிட்டேன். 
"31ம் திகதி ப்ரோக்ராம். rehearsalக்கு நாளைக்கு ஒன்பது மணிக்கு வர முடியுமா?" என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏனோ அடிவயித்துக்குள் கலர் கலரா பட்டாம் பூச்சி பறக்கத்தொடங்கிவிட்டிருன்தது.

அடுத்து பலவகையான நடனங்களை பழக/ஆட முயன்றிருந்தாதும் மேடையேறியது தாண்டவம் மாதிரி எதோ ஒரு நடனம் ஸ்கூல் ப்ரோக்ராமில் செய்ததோடு சரி. தர்சினியின் புண்ணியத்தில் "சரஸ்வதி சபதத்தில்" துர்க்கையாக கஷ்டப்பட்டு ஒருபக்க டயலாக் மனப்பாடம் செய்து நடித்தது. பின்பு karate, convocation, runway, pageant என்று பலவகையான நிகழ்வுகளுக்கு மேடையேறியிருந்தாலும் என்னமோ அந்த முதல் பாடல் தந்த அனுபவம் மாதிரி வரவில்லை. It was such a divine feeling.

"என்னை மன்னித்துவிடு" என்ற எனது முதல் (உரைநடைக்) கவிதை ஸ்கூல் magazine முதல் பக்கத்தில் வந்ததோட சரி. பின்பு அது ஏற்படுத்திய ரணகளத்துக்கு பல வருசமாய் மருந்து போட்டு போட்டு இன்னுமே சரியா ஆறலை. 

ரசிகையின் முதல் கதையை தப்பி தவறி பேப்பர்ல போட்டிடாங்க. ஆனா ஏனோ சந்தோசப்பட முடியலை. இம்புட்டுத்தான் நம்ம சாதனைப் பட்டியல். 

மற்றபடிக்கு நாம வெறும் ரசிகை மட்டுமே. மேடையில் வருண் கிருஷ்ணன் பாடுகையில் கீழே நித்யாவாக இருந்து ரசிப்பதில் இருக்கும் ஆனந்தம்/வெட்டி பந்தா, சாய்ந்து சாய்ந்து பார்க்கும் போது அடடா.. என்று என்னதான் நமக்கு வராது/இல்லை என்றாலுமே ரசித்தவை ஏராளம் ஏராளம். அவை கொடுத்துப்போன நினைவுகள் ஏராளம்.

தவிர, பல கொடுமையான நிகழ்வுகளில் கூட எதுவோ ஒன்று தப்பிக்க வைத்து இதுவரை வாழ வைத்திருக்கிறதே, அதனை ரசித்திருக்கிறேன். இப்படியாகப் பலதரப்பட்ட ரசனைகளில் இங்கே இந்த ஒருவருடத்தில் நான் பகிர்ந்துகொண்டது ஒருசிலவே. எழுதாமல் விட்டது இன்னும் எத்தனையோ. அவற்றையெல்லாம் சரியான காலம் வரும்போது நிச்சயமாகப் பகிர்ந்து கொள்வேன் என நம்புகிறேன்.

அதுவரை வணக்கம் கூறி விடைபெறுவது என்றும் உங்கள் 
நித்தியா அனந்தன். மன்னிக்கவும்.. கௌரி நித்தியா னந்தன்.. இல்லை கௌரி.. சரி சரி விடுங்க. கீப் இட் சோர்ட் அண்ட் ச்வீட். ரசிகை எண்டே இருக்கட்டும்.


முக்கிய குறிப்பு: நான் முன்பு இங்கே பல தடவை சொல்லியது போல இங்கு பதியப்படுபவை அனைத்தும் எனது சொந்தப் பார்வைகளே. அவற்றை ஏற்றுக்கொள்ளச் சொல்லி யாரையுமே இங்கு கட்டாயப் படுத்தவில்லை. அவை தவறாகப் படும் பட்சத்தில் உங்களது கருத்துக்களை தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம். நிற்க, சில மூன்றாந்தரக் கருத்துகளை அழித்துவிடும் வசதியிருப்பினும் அதனை நான் இன்னும் செய்யாமல் இருப்பது அவர்கள் கொஞ்சமேனும் வளர்ந்தபின்னர் தாங்களாகவே புரிந்து கொண்டு நீக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான். அதற்காய் மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)