நீ தானே என் பொன்வசந்தம்


எல்லோருமே ஒண்டு சேந்தாப்பல ப்ளோக்ல, fbல எண்டு திட்டித் தீர்க்கிறான்களே.. அவ்ளோ மோசமாவா இருக்கும் என்ற பயத்துடன் தான் பார்க்கத் தொடங்கியது. முதல் பாட்டு "புடிக்கலை மாமு". தொடக்கமே சொதப்பல், முக்கியமாக சந்தானம் இந்தப்பாட்டில் வலுக்கட்டாயமாக சொருகப்பட்டது போன்றொரு உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லை. வழமையாக படங்களில் சந்தானத்தினது காட்சிகள் கலகலப்பை உண்டுபண்ணும். இதில் என்னமோ அது மிஸ்ஸிங். ஒரு கட்டத்துக்குப் பின் விவேக்குக்கு நடந்ததுதான் நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

Collegeஇல் சமந்தாவை ஜீவா பல வருடங்களின் பின்பு முதன்முதலாக பார்க்கும் காட்சிகள் (அசடு வழிவது முதல் கொண்டு) வசனங்கள் அனைத்தும் அருமை. படத்துக்கே "நீ தானே என் பொன்வசந்தம்" எண்டு பேரை வைச்சிட்டு அந்த அருமையான பாடலை அவ்ளோ சுமாரா பாடியிருக்க வேணாம். தவிர நீண்டநாள் அமுங்கியிருந்த உணர்வுகளை மீண்டும் எழுப்பிக் கொண்டுவருமளவுக்கு, காயத்துக்கு மருந்திடுமளவுக்கு அந்த குரலில் வசீகரம் இல்லை என்று தான் சொல்லவேணும். பல இடங்களில் பார்த்த மேடைக்காட்சி என்றாலும் என்னமோ விசேடமாக இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக இருக்குமென எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றமே..

அடுத்து வழமையாய் வரும் ஊடல்.. சண்டை.. பிரிவு.. ஈகோ.. classic. ஜீவா சமந்தா இருவரினதும் யதார்த்த நடிப்பு அற்புதம். இருவரில் ஒருவர் சற்று அதிகப்படியாகவோ இல்லை குறைவாகவோ நடித்திருந்தால் நிச்சயமாய் அது கதையோட்டத்துக்கு பொருந்தியிருக்காது என்பதே எனது கருத்து. ஜீவாவைத் திட்டுபவர்கள் பலருக்கு அவரின் நடிப்பைவிட சமந்தா மேலிருந்த அதீத விருப்பம் காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 

இரண்டாவது பாதியில் குறை என்று சொல்வதற்கு எதுவுமில்லை, சந்தானத்தினது சைடு trackஐ தவிர. சுத்தமாய் பொருந்தவில்லை. லொள்ளு சபா வேறு சினிமா வேறு. இரண்டையும் கலந்தது கௌதமினது தவறு. 

சமந்தாவை தேடி ரயிலில் போகும்போது "காற்றைக் கொஞ்சம்" என்று தொடங்கும் இளையராஜா தொடர்ந்து "என்னோடு வாவா", "பெண்கள் என்றால்", "சற்று முன்பு" என்று படம் முடியும்வரை பாடல் மழையை நிறுத்தவேயில்லை. ஆனாலும் பெரும்பாலானவர்கள் விமர்சித்தது போலல்லாமல் எனக்கு என்னமோ அவைதான் உணர்வுகளின் அழுத்தத்துக்கு ஈடுகொடுத்து படத்துக்கு இன்னும் மெருகூட்டினவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

எனக்கு மிகவும் பிடித்த "முதன் முதல் பார்த்த ஞாபகம்" பாடலை கண்டமேனிக்கு பிய்த்துப் போட்டிருக்கிறார்கள். மற்றபடிக்கு "சாய்ந்து சாய்ந்து" அருமை. கிளைமாக்ஸ் அமைத்த விதத்திற்க்கே இந்தப் படத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு எழுபது மார்க்குக்கு மேலயே போடலாம்.



மொத்தத்தில் இன்னொரு GVM படம் பார்த்த நிறைவைத் தந்த படம். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)