மெமரி லீக்
வியாழமாற்றம் 03-01-2013 இந்தமுறை augmented reality சம்பந்தமானது. இப்பெல்லாம் நமக்கு கமெண்ட் போட்டு அலுத்துவிட்டது. எத்தனை நாளைக்குத் தான் நல்லா இருக்கு எண்டு போடுவது. அதனால் வெறும் like உடன் நிறுத்திவிடுவேன். ஆனால் அதையும் மீறி ரொம்பவே நன்றாக இருக்கிறது, கமெண்ட் போடுவம் எண்டு வெளிக்கிட்டால் நீண்டு நீண்டு பிறகு அதுவே ஒரு பதிவாகிவிடுகிறது. இம்முறை வியாழமாற்றம் வாசித்தபோது, முதலாவதாகத் தோன்றியது என்னய்யா ப்ரோக்ராம் பண்ணியிருக்கிறீங்க/றாங்க எண்டு தான். பலருக்கு இது ஒரு அர்த்தமில்லாத கேள்வியாகத் தோன்றும். ஆனால் நெட்வொர்க் அல்லது சிஸ்டம் சைடில் இருப்பவர்களுக்குத்தான் அதன் வலி புரியும். ஐந்து வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு மேஜர் ப்ரொஜெக்டில் மாட்டுப்பட்டிருந்தபோது என்னதான் திருகுதாளம் பண்ணியும் அந்த சிங்கப்பூரின் முதலாவது சர்ச் என்ஜின் வெப்சைட் லோட் ஆவதற்கு 30s எடுத்தது. ஒரே query யை கூட சிறிது நேரத்தின் பின் இரண்டாவது முறை கொடுக்கும்போதும் கூட அதே நிலைமை தான். உடனே ப்ரோக்ராமேர்ஸ் எல்லோரும் ஒன்று சேர்ந்தாப்பல நெட்வொர்கில் த...