Behind the "BLIND LOVE" (குருட்டுக் காதலின் பின்னால் )
நேற்று முழுவதும் ஏனோ தூக்கம் வரவில்லை. ஹிமாலயா கிரியேசன்ஸ் இனது அடுத்த கட்ட நகர்வுக்கான திட்டமிடல்கள் ஓரளவு பூர்த்தியடைந்த நிலையிலும் எதுவோ ஒன்று மனதுக்குள்ளிருந்து குடைந்து கொண்டிருந்தது. வெற்றியடைந்ததர்க்கான காரணங்களைவிட தோல்வியடந்ததர்க்கான காரணங்களை அறிந்து வைத்திருப்பது மீண்டும் அந்தப் பிழையை விடாமல் அவதானமாயிருக்க உதவிசெய்யும் அல்லவா? அந்த வகையில் ஹிமாலயாவின் முதலாவது சொந்தப் படைப்பான "Blind Love" அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டினைப் பெற்றிருந்தும் ஏனோ நாம் நினைத்தளவுக்கு பெரும்பாலோனோரை இன்னும் சென்றடையவில்லை. அதற்க்கு முக்கியமாய் நமது Marketing அணுகுமுறை சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்காக SunTV போல மூச்சுக்கு முந்நூறு தடவை விளம்பரம் போட முடியாது. குறைந்தது FB/YouTubeலயாவது pay பண்ணி promote பண்ணலாம். ஆனால் அவை எல்லாவற்றிட்க்கும் மேல் உண்மையான திறமைக்கு (இருந்தால்) கிடைக்கும் அங்கீகாரத்தினை முதலில் அறிந்துகொள்ள விரும்பினோம். அந்தவகையில் மைந்தன் சிவா, கவிஞர் அஸ்மின் போன்றவர்களின் கருத்துக்கள் தனித்துவமானவை. இன்னுமோர் ரசிகர் இவ்வாறு எழுதியிருந்தார்.