இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உழைப்பாளிகள் தினம்

படம்
"ஒரு Documentary செய்வதற்கு எட்டு மாசம் எடுக்குமா?" ஆச்சரியமாகக் கேட்டார் நண்பர் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் "ஒரு டாக்குமெண்டரி செய்வதற்கு ஐந்து வருடம் எடுக்குமா? " என்று வியந்து இன்னொரு நண்பரிடம் நானும் கூடக் கேட்டிருந்தேன். ஆவணப் படம் எடுப்பதென்பது கிட்டத்தட்ட அவர்களது பயணத்தை அவர்கள் கூடவே நாமும் பயணிப்பது போன்றது. சாதாரணமாக ஒரு விளம்பரம் / குறும்படம் செய்வது போலல்லாமல் இது அவர்கள் கூடவே பயணித்து அவர்களின் வலிகளை சாதனைகளை மிகைப்படுத்தாமல் அதேசமயம் சுவாரசியம் குறையாமலும் கொடுக்கவேண்டும். மிகவும் சிரமமான ஒரு வேலை. சில நிகழ்வுகள் நேரடியாக இருக்கும், ரீ-டேக் போகமுடியாது. ஒருமுறை சரிவர எடுக்கத் தவறினால் தவறினது தான். உதாரணத்துக்கு ஹோர்டிங் ஆரம்பகட்ட வேலைகள். நாமும் ஹோர்டிங்க்ஸ் போடுகிறோம் என்றுவிட்டு வெறுமனே ஒரு shotஇல் இதனைக் காட்டிவிட முடியும். ஆனால் அதன் ஆரம்பகட்ட வேலைகள் தொடக்கம் அதனை மாட்டுவது வரை இரவு பகலாக நின்று அவர்களின் கஷ்டங்களைப் பதிவு செய்திருக்கிறோம். சிலருக்கு இது அர்த்தமில்லாத ஒன்றாகத் தோன்றலாம். எனக்கும் கூட  இதற்க்க

தலை முடி

"என்ன திடீரென்று ஹிப்பி* வெட்டியாச்சு?" கேள்வி ஒன்றும் புதுசில்லை தான். அடிக்கடி வளர்ப்பதும் வெட்டுவதும் நமக்கு கைவந்தகலையென்று அதே ஆன்டி தான் சொல்லியிருக்கிறா. ஆனாலும் இம்முறை என்னமோ இடித்தது. ஒருவேளை சக்திவேல் அண்ணாவின் கூந்தலின் கதை யை படித்ததன் எதிரொலியோ தெரியவில்லை. இதுதான் நம்ம முடிக்கதை. சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு நான் வளருகிரனோ இல்லையோ கூந்தல் ஆறடிக்கு வளர்க்க வேண்டும் என்பது விருப்பம். அதை உடைப்பதர்க்காய் ஒவ்வொரு முறையும் நான் பண்ணிய தில்லு முல்லுகள் கொஞ்ச நஞ்சமில்லை. முதலில் சாட்டியது விளையாடினா தலை வேர்க்கும், தடிமன் வரும், பிறகு இரவிலை இழுக்கும். கிட்டத்தட்ட ஆண்டு நாலு வரைக்கும் இந்தச் சாட்டு செல்லுபடியாகியது. திடீரெண்டு ஒருநாள் வந்து "ரெண்டா பிரிச்சுக் கட்டினா வேர்க்காது தானே அதால இனி முடி வெட்ட வேண்டாம்" என்று ஒரு குண்டைப் போட்டுவிட்டார். அன்றிலிருந்து ரெட்டைக் குடுமியுடன் கொஞ்சக் காலம் திரிஞ்சது. அப்பெல்லாம் சனிக்கிழமையானா நம்ம வீடு இன்னொரு குருசேஷ்திரம் போல இருக்கும். எட்டுப் பரப்புக் காணியையும் அடிபடாது ஓடிக் களைத்து கடைசியில் அம்மாவிடம

பிறந்த நாள்

படம்
பிறந்தநாள் அதுவுமா விடிய காத்தால எழும்பி குளிச்சு கோவிலுக்கு போய் அவள் பெயரில் அர்ச்சனை பண்ணிட்டு பிரசாதமும் கையுமா வீடு வந்து, ஆறாவது முறையாக மங்களம்/அர்ச்சனை பாடி துயிலெழுப்பும் அம்மாவின் குரல் இப்போது எட்டாவது கட்டையை தொட்டிருக்கும். எழும்ப சற்றும் மனமேயில்லாமல் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து நடுவானில் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கும்போது தோன்றும் ஏண்டா பிறந்தோம் எண்டு.. சூரியனும் அதுபாட்டுக்கு சிரித்துவிட்டு அவள் பல் துலக்கி குளிச்சு ரெடி ஆகுமுன்னமே அந்திவானில் ஓடிப்போய் ஒழித்துவிடும். பிறகென்ன அப்பிடியே போய் திரும்பவும் அவள் பாட்டுக்கு தனது வேலையப் பார்க்கப் போய் மறுபடியும் அடுத்தநாள் காலை/மதியம் மங்களம் பாடி எழுந்திருக்கும் போது சில சமயம் தோன்றும் அட கடவுள் எவ்ளோ பாவம் என்று.. அதாகப் பட்டது என்னவெனில் வாழ்க்கையில் ஒரு லட்ச்சியமும் இல்லாமல் கடனே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் நிலைமையும் இதுதான். என்ன ஒன்று அவர்களுக்கு வேலை.. அவளுக்கு  தூக்கம்.  1995 ஏப்ரல் 10. பிறந்தநாளுக்கு ஒருவாரத்துக்கு முன்னமே என்றுமில்லாத ஒன்றாய் அமர்க்களப் படுத்த தொடங்கியிருந்த அவள

தங்க மீன்கள்

படம்
பல நாட்களின் பின்பு Mr Romeo படத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த  இந்தப்பாடல் ஐ தற்ச்செயலாய் கேட்க நேர்ந்தபோது தோன்றியது, "தங்க மீன்கள் தண்ணீரைக் காதலிக்குமா?" மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒரு சிறிய / அர்த்தமில்லாத கேள்விதான். ஆனால் இதுவே " நான்யார்? " என்ற தேடல் போலவே.. தங்க மீன்கள் என்றால் என்ன? அவை தங்கத்தாலான மீன்களா / தங்கமான குணமுள்ள மீன்களா? என்று நீண்டுகொண்டு போகக்கூடியது போலத் தோன்றியது.  முதலாவது வகை என்றால் விடை ஓரளவு எளிது. அதுவே ரெண்டாவது என்றால்.. உடனே தோன்றுவது மீன்கள் என்றால் அவை எத்தனை..? அவற்றுக்கிடையேயான உறவு என்ன? என்பதுதான். இப்படியான இன்னோரன்ன கேள்விகள் எழும் போதே ஆரம்ப கேள்வியை / அந்த மீனுக்கு  அடிப்படையானது ஆதாரமானது தண்ணீர் தான் என்பதையே மறந்து விடுகிறோம் இல்லையா? அதாவது இன்னோர் மீனைத் தேடும் / தங்கியிருக்கும் / கவரும் முயற்ச்சியில் தான் உயிர் வாழ்வதே தண்ணீரால் தான் என்பதை அதுவும் வெகு இலகுவிலே மறந்துவிடுகிறது. சரி சரி.. இந்த தத்துவ ஆராய்ச்சியில் இங்கே முக்கியமாய் சொல்ல வந்ததை மறந்திட்டன் பாருங்கோ. அதான் நம்ம " தங்க மீன்கள்