உழைப்பாளிகள் தினம்
"ஒரு Documentary செய்வதற்கு எட்டு மாசம் எடுக்குமா?" ஆச்சரியமாகக் கேட்டார் நண்பர் ஒருவர். சிலவருடங்களுக்கு முன்பு இப்படித்தான் "ஒரு டாக்குமெண்டரி செய்வதற்கு ஐந்து வருடம் எடுக்குமா? " என்று வியந்து இன்னொரு நண்பரிடம் நானும் கூடக் கேட்டிருந்தேன்.
ஆவணப் படம் எடுப்பதென்பது கிட்டத்தட்ட அவர்களது பயணத்தை அவர்கள் கூடவே நாமும் பயணிப்பது போன்றது. சாதாரணமாக ஒரு விளம்பரம் / குறும்படம் செய்வது போலல்லாமல் இது அவர்கள் கூடவே பயணித்து அவர்களின் வலிகளை சாதனைகளை மிகைப்படுத்தாமல் அதேசமயம் சுவாரசியம் குறையாமலும் கொடுக்கவேண்டும். மிகவும் சிரமமான ஒரு வேலை.
|
அப்போது ஒருநாள் அவர்கள் வேலை செய்துகொண்டிருக்கும் இடத்துக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. சேறிலும் சகதியிலும் நின்று தொடர்ந்து மூன்று நாட்களாக இரவுபகல் பாராது வேலை செய்துகொண்டிருந்தார்கள். நான் சென்ற சமயம் வேலை ஓரளவு பூர்த்தியடைந்திருந்தது. இருந்தும் அன்றிரவும் அவர்களில் ஒருவர் தங்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தனர். எதற்காக என்று கேட்டபோது "இல்லாட்டி இரவோடிரவா எவனாச்சும் வந்து அறுத்துட்டு ஓடிடுவான்." என்று பதில் வந்தபோது சற்றே அதிர்ந்துபோனேன். "எதனால் இப்படிச் செய்கிறார்கள்?" என்று கேட்டதற்கு, "வம்புக்குத் தான். போனமுறையும் இப்படித்தான் இரண்டு ஹோர்டிங்ஐ அறுத்துட்டுப் போய்ட்டாங்கள். அதுக்குப் பிறகு கனகாலத்துக்கப்புறம் இப்பதான் போடுறம். அதாலதான் வேலை முடியும் வரையாவது ஒராள் காவல் இருகிறது நல்லது." என்றார்.
எதிர்க்காற்று வேறு பலமாக அடித்து அவர்களின் பலத்தை சோதித்தது. ஒரு ஹோர்டிங் போடுவதில் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்பது அப்போதுதான் புரிந்தது. இயற்கையின் சீற்றத்துக்கு ஈடுகொடுத்து சாதனை படைக்க முடிந்த மனிதனால் சக மனிதர்களின் மன வக்கிரங்களுக்கு முன் எதுவும் செய்யமுடியாத நிலை.
எதிர்க்காற்று வேறு பலமாக அடித்து அவர்களின் பலத்தை சோதித்தது. ஒரு ஹோர்டிங் போடுவதில் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்பது அப்போதுதான் புரிந்தது. இயற்கையின் சீற்றத்துக்கு ஈடுகொடுத்து சாதனை படைக்க முடிந்த மனிதனால் சக மனிதர்களின் மன வக்கிரங்களுக்கு முன் எதுவும் செய்யமுடியாத நிலை.
பிற்குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட ஆவணப்படமானது DAN TV யிலும் DD TV யிலும் மேதினத்தன்று இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
கருத்துகள்