தங்க மீன்கள்
பல நாட்களின் பின்பு Mr Romeo படத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த இந்தப்பாடல்ஐ தற்ச்செயலாய் கேட்க நேர்ந்தபோது தோன்றியது,
"தங்க மீன்கள் தண்ணீரைக் காதலிக்குமா?"
மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒரு சிறிய / அர்த்தமில்லாத கேள்விதான். ஆனால் இதுவே "நான்யார்?" என்ற தேடல் போலவே.. தங்க மீன்கள் என்றால் என்ன? அவை தங்கத்தாலான மீன்களா / தங்கமான குணமுள்ள மீன்களா? என்று நீண்டுகொண்டு போகக்கூடியது போலத் தோன்றியது. முதலாவது வகை என்றால் விடை ஓரளவு எளிது. அதுவே ரெண்டாவது என்றால்.. உடனே தோன்றுவது மீன்கள் என்றால் அவை எத்தனை..? அவற்றுக்கிடையேயான உறவு என்ன? என்பதுதான். இப்படியான இன்னோரன்ன கேள்விகள் எழும் போதே ஆரம்ப கேள்வியை / அந்த மீனுக்கு அடிப்படையானது ஆதாரமானது தண்ணீர் தான் என்பதையே மறந்து விடுகிறோம் இல்லையா? அதாவது இன்னோர் மீனைத் தேடும் / தங்கியிருக்கும் / கவரும் முயற்ச்சியில் தான் உயிர் வாழ்வதே தண்ணீரால் தான் என்பதை அதுவும் வெகு இலகுவிலே மறந்துவிடுகிறது.
சரி சரி.. இந்த தத்துவ ஆராய்ச்சியில் இங்கே முக்கியமாய் சொல்ல வந்ததை மறந்திட்டன் பாருங்கோ. அதான் நம்ம "தங்க மீன்கள்" படக்குழு "உங்களுக்குள்ளை இருக்கிற புகைப்படக் கலைஞரை தட்டி எழுப்புவதற்காக" ஒரு போட்டி வைக்குதாம். அதிலை பங்கு பற்ற விரும்புபவர்கள் thangameenkalcontest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம்.
நிற்க, நம்மள்ட தானே வீட்லையே ரெண்டு தங்க மீன்கள் இருக்கே ஏன் அனுப்பக் கூடாது எண்டு ஒருதடவை தோணிச்சுது. ஆனா அடுத்த கணமே நாமெல்லாம் யாரு கும்பகர்ண பரம்பரைஎல்லே? நீங்க எப்பிடி எப்பிடித் தட்டினாலும் நாங்க எழும்ப மாட்டம்.. அப்பிடியே எழும்பினாலும் நம்ம தங்கமீன்களைப் பிடிச்சு வைச்சு படமெடுக்கிரதுக்குள்ளை அப்பப்பா.. வேணாம் சாமி!
நாங்க அப்பவே இப்படி.. |
அதால தயவு செய்து படலைக்காரரோ இல்லை கமராவை ஒரு கணமேனும் விட்டுப் பிரியாத சயந்தன் மற்றும் அவர் தோழர்களை பங்குபெறும் வண்ணம் அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. (ஏதொ நாமதான் நடத்திரப்போல.. ஏன் முடியாது? இருங்க.. இருங்க.. நாங்களும் வந்திட்டிருக்கிரம். நம்ம பிரபல எழுத்தாளர் மண்டையக் காய வைச்சு கதை பண்ணிட்டிருக்கிறார்.)
பிற்குறிப்பு : சரி ஒரு மாறுதலுக்காக பர்த்டே வேற வருதா அதால அம்மா கூட இருக்கிராப்பால ஏதாச்சும் ஒரு நல்ல படம் மாட்டுமா எண்டு கிண்டிப் பாத்தா.. எல்லாத்திலையுமே விளக்கெண்னை குடிச்ச எதொவாட்டம் மூஞ்சிய வைச்சிட்டிருக்குது நம்ம தங்கமீனு..
My Mom Still Thinks She's 29. |
கருத்துகள்