ஒளிச் சுவடுகள்
நேரம் அதிகாலை ஏழு மணியிருக்கும். முந்தைய இரவின் அசதி இன்னும் தீரவில்லை. வெறுப்புடன் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தால் முன்னால் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் கறுப்பு வெள்ளை நிறத்தில் தெரிந்தது. பத்தாதற்கு படங்களின் மேல் கோடு கோடாய் என்னமோ கிறுக்கினாப் போலிருந்தது. கண்களை நன்றாகக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தால் தற்போது படத்தின் கீழே சிறிதாய் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. ஆனால் படத்தில் மட்டும் எந்த மாற்றமுமில்லை. குழப்பத்துடன் எழுந்து அடுத்த பக்கத்தை திருப்பினால் வெள்ளை நிறத்தில் சுற்றி சுற்றி கைவிரல் ரேகை போல பல கோடுகள். அருகே பாலைவனத்தின் நடுவில் பாழடைந்த கட்டடமொன்றின் மேல் எரிகற்கள் வந்து விழுவது போல்.. அழகாகவும் அதேசமயம் பயங்கரமாகவும் இருந்தது. "Are you interested in photography?" திடுக்கிட்டு நிமிர்ந்தவளை கைகளில் சுடச்சுட கோப்பியுடன் எதிர்கொண்டவனை ஒருகணம் தயக்கத்துடன் நோக்கிவிட்டு சிறிதாய் முறுவலித்தாள். படமெடுப்பதேன்றால் காமேராவிலுள்ள பட்டனை பிரஸ் பண்ணுவதுவரை தான் அவளது Photography அறிவு. அதை அவனிடம் சொல்லி முதல் நா...