இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணக்கு வாத்தியார்

"இப்ப எதுக்கு சிரிச்சனீர்?" "ஒன்றுமில்லை சார்" "காரணமில்லாமல் சிரிக்க உமக்கு என்ன விசரே?" ........... "எனக்கிப்ப காரணம் தெரியோணும். அதுவரைக்கும் கிளாஸ் நடக்காது." ........... "நான் இத்தினை தரம் கேக்கிறன். ஒரு மாஸ்டர் எண்டு மரியாதையில்லாமல்.. எழும்பும் எழும்பும்.. எழும்பி வெளிய போய் நில்லும்." அவர் இப்போது கோபத்தின் உச்சியிலிருந்தார். ........... "இந்தப் பிள்ளை வெளிய போகாமல் நான் கிளாஸ் எடுக்க மாட்டன்." அதுவரை பேசாதிருந்தவள், கொப்பியை அடித்து மூடிவிட்டு எழுந்தாள். முன்னிருந்த நண்பியை மீண்டுமொருமுறை பார்த்தாள். அவள் உட்பட அனைவருமே தலையைக் குனிந்தபடி கொப்பியில் இல்லாத ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்தனர். கோபத்தில் இரத்தம் கொதித்தது. கொப்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், நிற்காமல் வேகமாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.  வகுப்பின் முதல் நாள் ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவுக்கு வந்தன. உயர் தரத்தில் என்ன படிப்பது என்று வீட்டில் அம்மாவும் அப்பாவும் வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க அவள்

காதல்(கள்)தின்ற நட்பு

படம்
"குரல்வளையில் சிக்கிய காற்று  சங்கீதமாவாதா காதல்..?" என்று நான் நாள் முழுக்க மண்டையைப் போட்டுடைத்து இரண்டு வரி ஒப்பேற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஓர் நாட்குறிப்பேடு முழுவதுமே நிரம்பிய ஆழமான கவிதைகளுடன் என்னை ஆச்சரியப்படுத்திய ஓர் நட்பு. வெள்ளவத்தை கடற்கரையில் ஓர்நாள்.. உன் கண்கள் என் தோழியைப் பார்க்கையில் என் கண்கள் திரும்பின கல்லறையை நோக்கி என்றுரைத்தாய். பாதி புரிந்தது மீதி புரியவில்லை. அன்றே முதல் விலகல் ஆரம்பம். ஆங்கிலம் என்பது அந்நிய மொழி அதைப் பேசுவதே பாவம் என்ற மனநிலையிலிருந்து வெளிவர முடியாமல் திணறிய என்னை ஆங்கிலம் பேச ஊக்கப்படுத்தி மாதமிருமுறை பிரிட்டிஷ் கவுன்சில் கூட்டிச் சென்ற ஓர் நட்பு. நடந்து வரும் வழியில் ஓர்நாள் titanic கப்பலின் மேல் கைவிரித்து நின்ற காதலர்களுக்காய் நாமிருவரும் சண்டையிட்டுக்கொண்டோம். உன்மேல் ஒருவித சந்தேகம் எழுகையில் அது இரண்டாவது விலகல். ஆண்கள் என்றாலே வேற்றுக்கிரக வாசிகள் போல் பார்த்த என்னை அவர்களுடன் சகஜமாகவும் அதே சமயம் அவர்களுக்கு வேறுவித எண்ணங்கள் வராமலும் / வரம்பு மீறும்படி தூண்டாமலும் எப்படிப் பேசுவது / பழகு

வில்லாடிய களமெங்கே?

படம்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒருநாள். St. Johns' கல்லூரி மைதானத்தின் நடுவே உச்சி வெயில் மண்டையப் பிளக்க ஆண்கள், பெண்கள் என்று பல நூற்றுக்கணக்கான இளையோர் வேர்க்க விறுவிறுக்க ஆள் மாறி ஆள் அணி மாறி அணிகள் என்று பல்வேறு வீர சகாசச் செயல்களை அரங்கில் நடாத்திக் காட்டிக் கொண்டிருந்தனர். தீமூட்டிய வளையங்களுக்குகூடாகப் பாய்தல், ஹிட்லர் மார்ச்சிங் (நாம் வைத்த பெயர்) என்று ஆண்கள் ஒருபக்கத்தில் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் பெண்கள் அணிகளும் (தீமூட்டாத) வளையங்களுக்கூடாகப் பாய்தல், tiger மார்ச்சிங் என்று தாமும் தமது ஆற்றலை நிரூபித்துக் கொண்டிருந்தனர். ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட ஆறு ஏழு அணிகளின் சாகாச நிகழ்வுகளை நடத்தக் கூடியளவுக்கு அந்த மைதானம் சற்று விஸ்தீரணமாகவே இருந்தது.   நம்மளை கண்டுபிடியுங்க பாக்கலாம்? அங்கு தான் அனன்சியா  அக்காவின் தலைமையில் களமிறங்கிய எமது அணி மிகச்சிறப்பாகவே களமாடி மாவட்ட அளவில் இரண்டாமிடத்தை தட்டிச் சென்றது. முதலாமிடத்தை வழமை போலவே வேம்படி மகளிர் கல்லூரி பெற்றுக்கொண்டது. அதற்க்கு அடுத்த வருடம் எமது கல்லூரி முதலாமிடத்தைப்

நூறுகோடி வானவில்

படம்
"அய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறுகோடி வானவில் மாறி மாறி சேருதே "  சித்தார்த் மேடையில் தோன்றியதுமே  நீ.பொ.வ வில் கௌதம்மேனன் , தான் பாடவேண்டும் என்பதற்காய் ஒரு அழகான பாட்டை சொதப்பியது தான் ஞாபகத்துக்கு வந்தது. நல்லகாலமாய் சித்தார்தின் குரல்/சுருதி அந்தளவுக்கு மோசமாயில்லை. ஆனாலும் ஜீவா அளவுக்கு stage performanceல இம்ப்ரெஸ் பண்ணலைன்னு தான் சொல்லணும். இருந்தாலும் அந்தப்பொண்ணு மட்டும் ரொம்பவே வெட்கப்பட்டுது..  "ஏதோ ஒரு ஆசை, வா வா கதை பேச" (சமந்தா மைண்ட் வாய்ஸ்ஐ கேட்ச் பண்ணிட்டமில்ல?) அப்புறமென்ன கட் பண்ணி ஓபன் பண்ணினா.. பச்சைப் பசேலென ஒருகாட்டின் நடுவே சமந்தாவும் சித்தார்த்தும் டூயட் பாடுறாங்க.. சமந்தா: "கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன்" சித்தார்த் :"கைகள் இருப்பது தொட்டு அணைத்திட அள்ளிக் கொள்ளத் துணிந்தேன்" ஆமா.. இது சோலோ சாங் தானே female வாய்ஸ் எப்பிடின்னு கேட்டிங்கன்னா.. 1. அதானே முதல்லையே கனவுக் காட்சின்னு சொல்லியாச்சு.. 2. ஆனானப்பட்ட (?) சித்தார்த்தே பாடும் போது நம்ம சமந்தாப் பொண்ணு பா