Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)


ஈழத்தின் முதலாவது (எனக்குத் தெரிந்தவரை) மொட்டை.. மன்னிக்கவும் முட்டை (3x) CCIE க்கு இன்னிக்கு முப்பத்து மூன்று வயசாகிறது. இவர் இன்று இந்த நிலைக்கு (உலகின் இத்தகைய மூன்று பட்டத்துடன் இருக்கும் முன்னூற்று சொச்சம் பேருள் ஒருவராய்) வருவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக  பட்ட பாடுகளையும்  நிறைவேற்றிய சில சாதனைகளையும் முன்னைய இரட்டை CCIE என்ற பதிவிலேயே  குறிப்பிட்டிருந்தேன். பிறந்தநாள் அதுவுமாய் திரும்ப கலாய்த்து மனுசனை டென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே  படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி பார்த்துவிட்டு மேலே தொடரவும்.


ஒரு மனுஷன் எம்புட்டுத்தான்யா படிப்பான்? அப்பிடின்னு சலிச்சுக்கிற பேர்வழிகள் எண்டால் கவலைப் படாதீங்க நீங்களும் நம்மில் ஒருவர் தான். அவனவன் சின்கிள் CCIE கே மூச்சு வாங்குது, இவங்கல்லாம் எப்படி டபுள் ட்ரிபில் எண்டு போறாங்கன்னு கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்துச்சென்னா மேல படியுங்க. இல்லைன்னா.. சாரி Quad-CCIE க்கெல்லாம் நம்ம ப்ளோக்ல என்ன வேலை?



சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு நாள் சிங்கப்பூரில் ஓர் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜனனியை அண்மித்த வயதில் ஓர் குழந்தை இருக்குமிடம் என்றே சொல்ல முடியாத வண்ணம் அந்த வீடு அழகாகவும், சுத்தமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. உள்ளே சென்ற போது ஹாலில் ஏற்கனவே நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் ஏனைய மூவரின் பழைய, தற்போதைய பாஸ்.

நாம் உள்ளே சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் பாடம் ஆரம்பமாகியது. முதலில் கற்பிக்கத் தொடங்கியது நம்ம விபின் (3xCCIE #23955) சார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் (என்னையும்) விட வயதில் குறைந்தவர் விபின். எவருமே தன்னைவிட குறைந்த வயதுள்ள ஒருவரிடம் படிப்பதற்கு என்றுமே தயங்குவார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. யாரும் நீ பெரிது நான் பெரிது என்று பாகுபாடு பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் விபினுக்கு முதலாவது CCIE எடுப்பதற்கு படிப்பித்தவர் கூட இப்போ இரண்டாவது எடுப்பதற்கு விபினிடம் படிக்கத் தயாராகவிருந்தார். விபின் மற்றும் அனந்தனின் பழைய பாஸும் இதில் உள்ளடக்கம்.

இப்போது அறையில் மொத்தமாய் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் கதைத்த மொழி பல சமயம் எனக்குப் புரியவில்லை. பாதி மலையாளம், மீதி தமிழ் கொஞ்சம் ஆங்கிலம் என்று ஒரு கலவையாயிருன்தது. அவரவர் தமக்கு சௌகரியமான மொழியில் பேசிக்கொண்டனர். அனைவருக்கும் அனைத்தும் புரிந்தது. (என்னைத் தவிர..)

சில உறவுகள் எங்கிருந்து வருகின்றன எதற்காய் தொடர்கின்றன என்பது பல சமயம் தெரிவதில்லை. அப்படித்தான் இவர்களும். மொழி வேறு தேசம் வேறு கலாச்சாரம் வேறு.. எனின் அவர்களை இணைத்தது எது?

நட்பு.. என்று வெறுமனே ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடலாம் தான். ஆனால் அவர்களிடம் இருந்தது அதையும் தாண்டி.. சாதிக்க வேண்டும் என்ற வெறியும் கூட. ஏழு பேர் கொண்ட இவர்களின் குழுவில் விபினுக்கும் அனந்தனுக்கும் இது மூன்றாவது CCIE. பாலன், விவேக், சனோஜ் ஆகியோருக்கு இரண்டாவது CCIE. கமா மற்றும் சந்தோஷ்க்கு முதலாவது. ஒவ்வொருவரும் தான் சித்தியடைந்தவுடன் மட்டும் நின்றுவிடாது மொத்தமாய் அவர்கள் குழுவில் சேர்ந்து படித்த ஏழுபேரும் பாஸ் பண்ணி முடிக்கும் வரைக்கும் அனைவருமே தாமே எக்ஸாம் செய்யப்போவதுபோல் பாடுபட்டனர். இத்தகைய ஒற்றுமை, டெடிகேசனை நிச்சயமாய் நான் வேறெங்குமே இதுவரை காணவில்லை.

அடுத்து, என்னதான் சாதனைகள் புரிந்தாலும் அதை வரவேற்கும் / கௌரவப்படுத்தும் குணம் நம்மவர்க்கு ரொம்பவே அரிது. அது பொறாமையினாலா அல்லது அறியாமையினாலா என்பது தெரியவில்லை. பலர் பொறாமையினால் தான் என்று சொல்லுவார்கள். ஆனால் அதில் எனக்கு பெரிதும் உடன்பாடில்லை. ஏனெனில் இப்படித்தான் ஓர் அதி தீவிர பொறாமையாளர் என்று கருதப்பட்டவர் ஒருவர் FBல அனந்தனுக்கு எல்லாரும் wish பண்ணுறதைப் பாத்திட்டு உடனை call போட்டு "அதென்ன அவ்ளோ பெரிய எக்ஸாமே?" எண்டு கேட்டவராம். இப்ப சொல்லுங்க அவரது, பொறாமையா? அறியாமையா? அல்லது அறியாமையில் வந்த பொறாமையா..?. யார் கண்டது ஒருவேளை வருசத்துக்கொரு பிள்ளை எண்டு நாம இறக்கிட்டிருக்க இவனென்னடாவெண்டால் வருசத்துக்கொரு CCIE எண்டு இறக்கிக் கொண்டிருக்கிறான் எண்ட கடுப்பாகூட இருக்கலாம். 

Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec)

இம்முறை அனந்தனின் யாழ் விஜயத்தின் போது யாழ் பல்கலைக்கழக கணனிப்பிரிவு மாணவர்களுக்கு ஒரு "Inspirational Talk" கொடுக்கமுடியுமா என்று விரிவுரையாளர் சர்வேஸ் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க அங்கும் ஒரு விஜயம் செய்தாயிற்று. முதல் நாள் ஜனனிக்கு ஒரு சின்ன அறுவை சிகிச்சை நடந்ததினால் இந்த அறுவையை.. மன்னிக்கவும் உரையை கேட்கும் பாக்கியம் நமக்கு கிட்டவில்லை.

(ஒரு சின்ன திருத்தம்.. Dual இல்லை Tripple CCIE)

அன்றிரவே சர்வேஸ் போனில் "நன்றாயிருந்தது. ஆனாலும் ஒரு குறை" எனவும் கொஞ்சம் 'பக்' என்றாயிற்று. "அதொண்டுமில்லை. அனந்தனுக்கு ஒரு டீ கூட வேண்டிக்கொடுக்க முடியவில்லை. அதான் குறை நினைக்க வேண்டாம். எண்டு சொல்லுங்கோ" என்றார். 



சரி வந்ததுதான் வந்தது.. ஊரில ஒரு ரெண்டு பரப்பு காணி வாங்கி போடுவம் எண்டால், உள்ளூர் வெளியூர் எண்டு ஆளாளுக்கு (வேலை மினக்கெட்டு போன்பண்ணி) கிலி காட்டின்டு இருக்கிறாங்க. கடைசில செட்டை(set) தான் போட்டு இப்பிடி பாடிட்டு இருக்கிறதோ தெரியேல்லை..!


எதுவோ.. நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது. நடப்பதும் நன்றாகவே நடக்கிறது. அதுபோல் நடக்கவிருப்பதும் நன்றாகவே நடக்கும். ஆளை விடுங்கப்பா சாமி..!


பிற்குறிப்பு: அனந்தனின் பிறந்தநாள் September 28th. வடமாகாணசபை தேர்தல் September 21st. நாளைய தேதி August 25th. ஒண்ணுக்கொன்னு சம்பந்தமிருக்கா இல்லையா எண்டு தெரியலை. ஆனா அனந்தண்டை பிறந்தநாளுக்கு எழுதுவம் எண்டு நினைத்தது. எதுக்கும் இருக்கட்டும் என்று சற்று முன்னாடியே வெளியிடப்படுகிறது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதென்னா திருப்பி சரியான திகதியில் பகிர்ந்துக்கிறேன். சாரி போர் தி கான்பியுசன்..




கருத்துகள்

Gajen இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் அனந்தன்.......
எஸ் சக்திவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் அனந்தன் மற்றும் கௌரி. இனி என்ன? ஏதாவது புத்தகம் எழுதும் எண்ணம் உண்டா? (அனந்தன் யோகநாதன் என்ற பெயரில் Cisco Press புத்தகம் பார்க்க ஆசை. இதைவிட vendor neutral எனின் இன்னும் நன்று.

எனக்கென்னவோ எம்மவர் பொறாமை காரணமாகவே ஒருவரை ஒருவர் பாராட்டுவது இல்லை என்றோரு அபிப்பிராயம் உண்டு. அவ்வபிப்பிராயம் தவறென்றால் மகிழ்வேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)