நூற்றிலொரு வார்த்தை


எல்லோரும் எதிரபார்த்த ஒன்றே எனினும் கடைசிநிமிட படபடப்பு/பரபரப்புகளின் மத்தியில் சற்றே சலனம் கொள்ள வைத்த தேர்தல் இது. இறுதி முடிவு பற்றி நான் சொல்வதை விட எமது நண்பர்கள்/நண்பர்களின் வட்டம் சொல்லிய/பகிர்ந்த கருத்துகளிலிருந்து ஒரு சில இன்றைய உங்கள் பார்வைக்கு..



மலர்ந்தது தமிழர் அரசு


Aswin Sutharsan shared Castro Rahul's photo.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத பேப்பர் என்றா அது உதயன் தான்..

என்னது தமிழீம் கிடைச்சிற்றா??


  • வடமாகாணசபை தேர்தலில் இம்முறை அனைத்து தமிழ் மக்களும் காட்டியிருக்கும் வாக்களிக்கும் ஆர்வம் பாராடத்தக்களவு வாக்களிப்பு வீதம் என இவ்வளவுக்கு ஒரு பெருவெற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது...யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா, மன்னார் என அனைத்து மக்களின் பங்கும் உண்மையில் பாராட்டத்தக்கது.....

    தாங்களே 20 வருடங்களுக்கு முன்னர் காணிகளை அபகரித்தது விட்டு 20 வருடங்கள் கழித்து அவற்றை தாம் தான் மீட்டுக் கொடுப்பது போல காடியவர்களுக்கும், தாமே அழித்தவற்றை மீண்டும் கட்டி எழுப்புகிறோம், அபிவிருத்தி என்ற பெயரில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், இவற்ற்றை எல்லாம் தான் தான்கேட்டு பெற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லியே அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் நெத்தியடி தான் இது...

    இப்படி ஒரு வாக்களிப்பு வீதமும் ஆர்வமும் 2010 பாராளுமன்ற தேர்தலில் காட்டப்படிருக்கவில்லை...3 வருடங்களின் பின் காட்டப்படிருப்பதானது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும், இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையுமே காட்டி நிற்கிறது...


  • வரிக்கு வரி விடுதலைப்புலிகளை சொன்னதால் மட்டும் தான் அராஜக அடக்குமுறைகளின் உச்சக்கட்டத்திலும் மக்கள் தைரியமாக ஓட்டுப்போட வந்தார்கள்.. கூட்டமைப்புக்கு புள்ளடி குத்தினார்கள்.

    எத்தனை குழப்பங்கள் செய்தும்.. எந்த குழப்பமும் இல்லாத சனம்.

    உண்மையாகவே ஒரு தமிழீழ பிரஜையாக (தமிழன் என்று சொல்லி இதில் தமிழகத்தவர்களையும் இணைப்பதில் துளியும் உடன்பாடில்லை.. அவர்களால் இப்படி உரிமைக்காக ஓட்டுப்போட முடியாது. இலவசங்களுக்கு ஓட்டுப்போடுபவர்களுக்கு உரிமையின் அருமை எப்படித்தெரியும்) உணர்வதில் அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது. 

    சர்வஜன வாக்கெடுப்பை நடத்தட்டும்... இத்தனை ஆயுதங்களுடன் சிங்கள இராணுவத்தை உலாவ விடட்டும்... "புலிகள் புலிகள்" என்று முணுமுணுத்தபடி அச்சம் தீர்த்து உரிமை வெறிபிடித்து தமிழீழ அரசை சனம் அமைக்கும்.

    நாங்கள் சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகத தமிழீழ மக்கள். எங்களை கட்டியெழுப்பியவர்கள் புலிகள்.

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.



ஹஹா என்ன ஒரு உன்னதமான காலைப்பொழுது..!!
சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் தான்...சிங்கத்துக்கு ஓங்கி அடிச்சிருக்கோம் பாருங்க ஆயிரம் டன் வெயிட்ல...!!!

சும்மா அடியில்ல..நாய் பேய் அடி...!!மரண அடி..!!!இதுக்கு பெயர் பெரும்பான்மை இல்லையோய்..ஒரு சில புல்லுருவிகள்,நாணல்களை தவிர்த்து எப்போதுமே நாம தான்லே கிங்கு..!!

நம்ம வேலைய நாம கரெக்ட்டா பண்ணியாச்சு...எனியாச்சும் நீங்க உருப்படியா ஏதும் பண்ணுங்கடா கூட்டமைப்பு நொண்ணைங்களா..!!!


தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது நாம் யாவரும் அறிந்ததே ..ஆனால் தீவகம்,ஊர்காவற்துறை, தொகுதிகளில் சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை உலுப்பி அதன் கோட்டையை தகர்த்த பா.கஜதீபன் அண்ணா மாற்றமுடியாத வரலாற்று மாற்றத்தை மாற்றிக்காட்டியிருக்கிறார் ...


பெருமகிழ்ச்சி, பெருமை, நன்றி, நம்பிக்கை +ஒற்றுமை 
#தேர்தல் #கடமை #எதிர்காலம் #பதில் 
ஒற்றுமையே உறுதியானதும் இறுதியுமானதுமான பலம்



வந்தால் அலையாய் வருவோம்!!
வீழ்ந்தால் விதையாய் விழ்வோம்!!
மீண்டும் மீண்டும் எழுவோம்!!

காயமுற்ற மனதொன்றை ஆற்றுப்படுத்துவதென்பது குண்டும் குழியுமான தெரு ஒன்றைத் தார் இட்டு நிரப்பிச் செப்பனிடுவது போன்றதல்ல.

ஆறிய காயங்கள் சில உண்டு..
ஆறாத காயங்கள் பல உண்டு...

Like ·  ·  · 2 hours ago · 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்

இணையத்தில்.. (Click here)