Ruhbins Building Constructors Documentary
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என்றாலே நாத்திகர்கள் தாம் என்று அடையாள படுத்திவரும் நிலையில் கோவில்கள் கட்டுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லது பகுத்தறிவில்லாதவர்கள் என்றொரு கருத்து ஆழமாகப் பதிந்து / பதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆழ்ந்து நோக்கினால் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தளவுக்கு இவை உதவுகின்றனவோ இல்லையோ எமது கலாச்சாரத்தின் விழுமியங்களாயிருந்து அதனைப் பேணிப் பாதுகாத்து வரும் இடங்களாயிருக்கின்றன என்பது உண்மை.
'தமிழ்நாடு' என்று பெயரிலேயே தமிழை வைத்திருக்கும் ஒரு நாட்டில் (மாநிலத்தில்) சென்னை முதல் கன்னியாகுமரிவரை கிட்டத்தட்ட இருபதுநாள் பயணம் மேட்கொண்டிருந்தபோது கூட "நான் தமிழன்டா" என்று நினைத்து பெருமைப்பட்ட சந்தர்ப்பங்கள் வெகுசிலவே. மதுரை, சிதம்பரம், மலைக்கோவில், ஸ்ரீரங்கம், திருவெண்ணாமலை, தஞ்சாவூர், கேரள ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம், திருப்பதி போன்ற முப்பதிற்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர் பெரியகோவிலையும் கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்க்கையில் சற்றே மலைப்பாகவிருந்தது. ஆனால் இத்தகைய பல அரிய கலைபொக்கிசங்களை அவற்றின் மதிப்புணராது கையாள்வதைப் பார்க்கையில் இதற்க்கு எமது நாடு எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது.
இங்கெல்லாம் பள்ளிக்கூடம் கட்ட உதவுகிறார்களோ இல்லையோ யாராவது கோவில் கட்டப் போகிறோம் / திருத்தப் போகிறோம் என்று கேட்டால் மட்டும் வாரியள்ளிக் கொடுப்பது நமது பண்பாடு(?). அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது சிலரின் வியாபார தந்திரம்.
இவ்வாறாக ஒவ்வொருவரும் கோவிலை மனசாந்தி தருமிடம், புதிய நகை, புடவை டிசைன்களை அணிந்து / அறிந்துகொள்ளும் இடம், பொழுது போக்குமிடம், கலாசார விழுமியம், கலாசார சீர்கேடு நடக்குமிடம் (சென்றமுறை நல்லூர் திருவிழாவுக்கு போடப்பட்ட பக்திப் படங்கள் இம்முறை நிறுத்தப்பட்டதற்கு கூறப்பட்ட காரணம் தான் இது), பணம் கொழிக்கும் இடம், சுற்றுலா தலம் என்று இப்படிப் பல விதமாக பாவித்துக் கொண்டாலுமே அவற்றிற்கும், அவற்றின் உள்ளே வீற்றிருக்கும் மூல மூர்த்திகளுக்கும் உள்ள மரியாதை தமிழ் நாட்டைவிட யாழ் மண்ணில் மிக மிக அதிகம் தான்.
இப்பேர்ப்பட்ட யாழ் மண்ணில் அழகிய கலையம்சங்கள் நிறைந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலாலான கோவில்களை, கட்டடங்களை நிர்மானித்த Ruhbins Building Constructors இற்கு ஒரு ஐந்து நிமிட ஆவணப் படம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் அவர்கள் நிர்மாணித்த கட்டடங்களை மட்டுமல்லாது யாழ் நகரத்தின் சிறப்புமிக்க சில கட்டடங்களையும் கொண்டுவர நினைத்தோம். ஆனால் அவற்றின் படங்களை நேரடியாக உபயோகித்தால் அவற்றைக் கட்டியதும் இவர்கள் தான் என்றதொரு தவறான கருத்தும் வர வாய்ப்பிருக்கிறது. எனவே தான் அவற்றை வரைந்து எடுத்து அனிமேஷன் மூலம் காட்டியிருக்கிறோம். இவற்றை அழகாக வரைந்து கொடுத்த ஜனனி அக்கா முதல் அவற்றை ஒழுங்கமைத்து அனிமேஷன் கொடுத்த நமது அனிமேட்டர் துசிகரன், இந்தியாவில் கடுமையான படிப்பின் நடுவிலும் எமக்காக நேரமொதுக்கி இசையமைத்துக் கொடுத்த சுகன்யன் வரை அனைவரின் உழைப்புமே மிக நேர்த்தியாக வந்திருக்கிறது.
இதுகாலவரையில் ஆங்கில டப்பிங்ற்கு பெரும்பாலும் கணணி மென்பொருள் மூலமான குரலையே உபயோகப்படுத்தியிருந்தோம். இதற்க்கு எப்படியாவது ரியல் வாய்ஸ் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்று முதலிலேயே சுகன்யன் தீர்மானம் பண்ணியிருந்ததனால் அவரது நண்பர் Chris யாழ் வந்திருந்த நேரம் அவரைக் கொண்டு முழு டப்பிங்கும் செய்து முடித்தோம்.
Chris ஐப் பற்றிச் சொல்வதானால் அவர் ஒரு மிக இனிமையான நண்பர், பலே நடனம் தெரிந்தவர், பாடகர். அவர் இங்கிருந்த காலப்பகுதியில் தான் அவரது பிறந்தநாளும் வந்தது. அதனை எமது வழமையான முறைப்படி* செய்து ஒருவழி பண்ணிவிட்டோம். அவர் கண்கள் கலங்கி நன்றி கூறியபோது தான் தெரிந்தது, இப்படி அவரது பிறந்தநாளைக் கொண்டாடி பலவருடங்கலாகிவிட்டன என்று. சிறு வயதில் ஒருமுறை தாயுடன் கொண்டாடியதாய் ஞாபகம், அதற்குப் பின்பு இம்முறைதான் என்றார். ஹிமாலயமலை நோக்கிய அவரது பயணத்தில் ஹிமாலயா கிரியேசன்ஸ் இலும் சிறிது காலம் தரித்துச் சென்றதில் எமக்கும் மகிழ்ச்சியே.
"Chris is not only a friend but also he is within the frame of Himalaya Creations. The attitude of him is beyond our imagination. We as the Himalaya Creations Pvt. Ltd will always remember you."
பிற்குறிப்பு: அது என்ன எமது முறைப்படியான பிறந்தநாள் என்று பார்க்க ஆர்வமானவர்கள் கீழேயுள்ள காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நிற்க, எல்லா பிறந்தநாளும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு கலாட்டா நிச்சயம்.
அல்வை முத்துமாரியம்மன் கோவில் |
'தமிழ்நாடு' என்று பெயரிலேயே தமிழை வைத்திருக்கும் ஒரு நாட்டில் (மாநிலத்தில்) சென்னை முதல் கன்னியாகுமரிவரை கிட்டத்தட்ட இருபதுநாள் பயணம் மேட்கொண்டிருந்தபோது கூட "நான் தமிழன்டா" என்று நினைத்து பெருமைப்பட்ட சந்தர்ப்பங்கள் வெகுசிலவே. மதுரை, சிதம்பரம், மலைக்கோவில், ஸ்ரீரங்கம், திருவெண்ணாமலை, தஞ்சாவூர், கேரள ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம், திருப்பதி போன்ற முப்பதிற்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர் பெரியகோவிலையும் கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்க்கையில் சற்றே மலைப்பாகவிருந்தது. ஆனால் இத்தகைய பல அரிய கலைபொக்கிசங்களை அவற்றின் மதிப்புணராது கையாள்வதைப் பார்க்கையில் இதற்க்கு எமது நாடு எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது.
Methodist Girls High School, PP. |
இவ்வாறாக ஒவ்வொருவரும் கோவிலை மனசாந்தி தருமிடம், புதிய நகை, புடவை டிசைன்களை அணிந்து / அறிந்துகொள்ளும் இடம், பொழுது போக்குமிடம், கலாசார விழுமியம், கலாசார சீர்கேடு நடக்குமிடம் (சென்றமுறை நல்லூர் திருவிழாவுக்கு போடப்பட்ட பக்திப் படங்கள் இம்முறை நிறுத்தப்பட்டதற்கு கூறப்பட்ட காரணம் தான் இது), பணம் கொழிக்கும் இடம், சுற்றுலா தலம் என்று இப்படிப் பல விதமாக பாவித்துக் கொண்டாலுமே அவற்றிற்கும், அவற்றின் உள்ளே வீற்றிருக்கும் மூல மூர்த்திகளுக்கும் உள்ள மரியாதை தமிழ் நாட்டைவிட யாழ் மண்ணில் மிக மிக அதிகம் தான்.
Chithamparapillai Block |
இதுகாலவரையில் ஆங்கில டப்பிங்ற்கு பெரும்பாலும் கணணி மென்பொருள் மூலமான குரலையே உபயோகப்படுத்தியிருந்தோம். இதற்க்கு எப்படியாவது ரியல் வாய்ஸ் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்று முதலிலேயே சுகன்யன் தீர்மானம் பண்ணியிருந்ததனால் அவரது நண்பர் Chris யாழ் வந்திருந்த நேரம் அவரைக் கொண்டு முழு டப்பிங்கும் செய்து முடித்தோம்.
"Chris is not only a friend but also he is within the frame of Himalaya Creations. The attitude of him is beyond our imagination. We as the Himalaya Creations Pvt. Ltd will always remember you."
பிற்குறிப்பு: அது என்ன எமது முறைப்படியான பிறந்தநாள் என்று பார்க்க ஆர்வமானவர்கள் கீழேயுள்ள காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நிற்க, எல்லா பிறந்தநாளும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு கலாட்டா நிச்சயம்.
கருத்துகள்
//பெஞ்சன் எடுத்தபின் ஒவ்வொரு இடத்திலும் நாட்கணக்கில் நின்று பார்க்க ஆசை.// இப்படித்தான் சொல்லி சொல்லி எங்கப்பா எழுபத்து இரண்டு வயசிலும் இன்னும் வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்.
PS: ஆவணப்படம் பற்றி ஒண்டும் சொல்லலியே பாஸ்..