ஏய் பொண்ணு!
தமிழ்ப் படங்களில் கட்டபஞ்சாயத்து காட்சிகளில் வரும் பண்ணையார்கள் போன்ற உருவத்தில் இரண்டுபேர். முழுவதுமாய் நரைத்த தலையுடனும், வெள்ளை வேட்டி சட்டையிலுமாக சற்றுத் தொலைவில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர். "ஏய் பொண்ணு, இங்கை வா" நர்சரியின் முன்பு நான்கு வயது குழந்தை ஒன்று, சற்றே தூரத்தில் நின்றிருந்த மற்றைய குழந்தையை அழைத்துக் கொண்டிருந்தது. மற்றையது பாதி புரிந்தும் புரியாமலும் தாயை பரிதாபமாகப் பார்த்தது. +++++++++++++++ அது சற்று முன்புதான் மரணச்சடங்கு நடந்துமுடிந்த வீடு. ஆண்கள் பலரும் சுடலைக்குப் போயிருந்தனர். வயதுபோன சிலர் மட்டும் வெளியே இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பெண்கள் வீடு கழுவுவதிலும் வந்தவர்களுக்கு டீ குடுப்பதிலும் மும்முரமாயிருந்தனர். "ஏய் அக்கா இஞ்சை வா.." சற்றே வளர்ந்த குழந்தையொன்று கிணத்தடியில் நின்ற தனது அக்காவை அழைத்துக்கொண்டிருந்தது. "கோபி, இங்கை வா." முழு நீள காற்சட்டையும் வெள்ளை ஷர்டின் மேலே பெல்ட் அணிந்தபடி முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்தவர் அந்தக் குழந்தையை அழைத்தார். "என்ன ...