காதலின் தற்கொலைகள்
"உங்கடை மகள் என்ன.. யாரோ ஒரு ....யப் பெடியனைக் காதலிக்குதாமே?" கேட்டதிலிருந்து அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரின் அக்காவின் மகளின் காதல் (கலப்புத்) திருமணத்துக்குப் போகாதிருந்த காரணம் இன்று கண்முன்பு பூதாகரமாகி நிற்கிறது. இரவு முழுக்கத் தூக்கம் வரவில்லை. "என்னப்பா இது சரிவருமே? உன்னட்டை ஏதும் இதப் பற்றி சொல்லியிருக்கிறாளே?" "எனக்கு ஒண்டும் தெரியாது. ஏதோ அவளின்டை பழைய சிநேகிதியிண்டை ஒன்றுவிட்ட அண்ணனோ மச்சான்காரனோ எண்டு சொன்னவள். வேறையொண்டும் சொல்லேலை. நீங்களே அவளோடை கதையுங்கோ.." இரவிரவா செல்லடிச்சா கூட எழும்பாதவளுக்கு யாரும் ரகசியம் கதைத்தால் மட்டும் தூக்கம் கலைந்துவிடும். அப்படி எழுந்தவள் கதை தன்னைப் பற்றித் தான் என்றுணர்ந்ததும் தீவிரமாக அவதானிக்கத் தொடங்கினாள். "யார் அந்த ...... ஊர்ப் பெட்டை தானே? அவை ...யர் எண்டு நீ தானே சொன்னது.." "எண்டுதான் நினைக்கிறன். நீங்களே அவளோடை கதையுங்கோ.." அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இத்தனை வருடங்களில் எத்தனை காதல்களை / காதல் என நம்பப் பட்டவைகள...