'ஓம் சாந்தி' (I am a Peaceful Soul)
ஏனோ இதுவரை இங்கே நம்மைப்பற்றிய பயோ டேட்டா (நேரடியாக) எழுதவேண்டிய தேவை வரவில்லை. அப்படி வந்த சமயத்தில் 'ஓம் சாந்தி' (I am a Peaceful Soul) அப்பிடின்னு ஒற்றை வரியில் அமைதியா சொல்லிட்டுப்போற பக்குவம் / தெளிவு வந்திடிச்சு. இருந்தும் இந்த மாற்றம் வருவதற்குள் பல வருடங்களல்ல, பல பிறவிகள் சென்றிருந்தன. அதெப்பிடின்னு சின்னதா, அறுதியும் இறுதியுமா.. ஒரு trailer போட்டோம்ன்னா.. பல பிறவிகளின் சாரமாக.. இந்தப் பிறவியில், பதினைந்து வயதுவரை, சைவத் திருமுறைகள், ஆண்டாள் பாயிரங்கள், நாயன்மார் சரிதைகள், சைவ சித்தாந்தங்கள் என்று பக்தி மார்க்கத்தில் கடவுளைக் காதலித்த காலம் முதல் அத்வைதம், துவைதம், சென் தத்துவங்கள், ஓஷோவின் பார்வைகள் என்று பலவற்றை இருபத்தியைந்து வயதுவரை தத்துவார்த்த ரீதியிலும், எண்ண அலைகள், அல்பா, பீட்டா, டெல்டா, தீற்ரா, பிரைன்வேவ்ஸ் என காது கிழிய ஹெட்போனை மாட்டிட்டு முப்பது வயதுவரை விஞ்ஞான/பௌதீக ரீதியிலும் எதையோ கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து செய்து களைத்து போதும்டா சாமி, கடல்லையே இல்லையாம்.. எனும்போது தான் அந்த அதிசயம் நடந்தது. இற்றைக்கு ச