மௌனங்கள் கலைகின்றன
நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக 'நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்' ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வினை ஆர்ப்பாட்டம் என்பதை விட கவனயீர்ப்பு அல்லது நினைவுகூரல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். நேற்றைய தினம்.. நேரம் ஒரு மூன்று மணியிருக்கும் அப்போது தான் எனது கல்லூரியின் பழைய டைரக்டர் செல்லவிருக்கும் ஒரு நிகழ்வு சம்பந்தமாக FBயில் அறிகிறேன். அவர் ஒரு சிங்களவர் எனினும், தமிழர் நலனில் அதிக அக்கறையுள்ளவர். அரசியல் நிலைகள் என்பதினைத் தவிர்த்துப் பார்த்தால் 'ரோசி சேனநாயக' அவர்கள் என்னால் என்றுமே வியந்து பார்க்கப்படும் ஒருவர். அவரது ஆளுமை தன்னம்பிக்கை திடசங்கர்ல்பம் ஒவ்வோர் பெண்களுக்குமே இருந்துவிட்டால் நிச்சயமாக நாம் அரசியலில் முப்பது வீதமென்ன ஐம்பது வீத பிரதிநிதிதுவத்தினை கூட பெற்றுவிட முடியும் என்பது திண்ணம். நிற்க, இந்நிகழ்வு சம்பந்தமாக மேலதிக விபரங்களை தமிழ்வின் மூலம் அறிந்து கொண்டதன் பின்னர் புறப்படலாம் என்று முடிவெடுத்து வெளிக்கிடும்போது அம்மா வந்து கேட்டார் எங்கே போகிறேன் என்று. வழமையாய் வீட்டில் யா...