Y.Ananthan (Quad CCIE #28365)
உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அதை அடைவது சந்தோசமென்றால் அதை அடைய உதவுவது அதைவிட சந்தோசம்.
சிறுது நேரத்தில் அவன் விடை பெறுவதாய் கூறவே அவளும் பஸ் ஹால்ட் வரை சென்றாள். பஸ்சில் ஏறச் சென்றவன் சற்றே தாமதித்து திரும்பி அவள் பக்கம் வந்தான். "எண்ட லட்சியம் என்னனு கேட்டாய் தானே..?" அவள் திகைப்புடன் அவனையே கண்வெட்டாமல் பார்த்தாள். "ஒரு பெரிய நெட்வொர்க் ஆர்கிடெக்ட் ஆக வரவேணும். உலகத்திலையே விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்குள்ள எண்ட பேரும் இருக்க வேணும்." அவளுக்கு எதுவும் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. மெதுவான குரலிலை அவள் சொன்னாள்.. "எண்ட கனவு எதெண்டு கேட்டாய் தானே..?" இப்போது அவன் புரியாமல் பார்த்தான். "உன்னை அந்த இடத்தில பார்க்க வேணும். அதுதான்.."

பொதுவாகவே இந்த எக்ஸாம் எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும் என்பதனால் நான் இங்கு விலாவாரியாக எழுத தேவையில்லை. தெரியாதவர்கள் இங்கே சொடுக்கி பார்க்கலாம். என்னதான் நீங்க ஒருவருஷம் முழுவதும் முக்கி முக்கி படிச்சாலும் அந்த கடைசி ஓரிரு மாதங்கள் மிக மிக முக்கியம். அதனால் தான் நாம ஜனனியுடன் அடிக்கடி இலங்கைக்கு காசியாத்திரை போகவேண்டியிருப்பது. சரி இப்படியெல்லாம் படிச்சு அப்பிடி என்னத்த தான் கண்டீங்கன்னு கேட்டா.. சம்பளம், அந்தஸ்து எல்லாத்தையும் தாண்டி.. உங்க கனவுகளை அடையும்போது ஒரு மனதிருப்தி வருமே.. அதை வார்த்தைகளால வர்ணிக்க முடியாது. அதன் பின்னர் உங்கள் முன் இமாலய பிரச்சினையே வந்தாலும் எல்லாமே தூசுபோல் தெரியும்.. ஆனால் கூடவே தன்னடக்கமும் இருந்தால் யாரிடமும் மிண்ட வேண்டிய தேவையிருக்காது. தவிர, எல்லா சந்தர்ப்பங்களும் எமக்கே சாதகமாக அமையும்.
உதாரணத்துக்கு ஒரு சுவாரசியமான சம்பவத்தினை மட்டும் கூறி முடிக்கலாம் எண்டு இருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் ஆசிய பிராந்திய நெட்வொர்க் புரோபிசனல்ஸ்க்கு நடந்த கான்பிரன்ஸ்க்கு அனந்தனும் அவரின் பழைய முதலாளியும் போயிருந்த சமயம் இலங்கையில் தலை சிறந்த ஒரு கம்பனியில் இருந்தும் சிலர் வந்திருந்தனர். அவர்கள் சற்றே மேம்போக்காக அளவளாவிகொண்டிருந்த சமயம் அனந்தனின் முதலாளி வந்திருக்கிறார். அப்போது அனந்தன் அவருடன் கதைத்த பின்னர் இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இவர் தனது பழைய முதலாளி என்று சொல்லி அறிமுகப்படுத்த, "முதலாளியா? இப்படி சகஜமா கதைக்கிறீங்களே?" என்று கேட்டிருக்கின்றனர். அதற்க்கு அனந்தன் "இங்கு அப்படித்தான்" என்று சொல்லி முடிக்கவில்லை. அனந்தனின் முதலாளி "நான் என்னப்பா பெரியாள்.. இவருதான் மூண்டு ccie எடுத்திட்டு இப்ப நாலாவதுக்கு படிச்சிட்டு இருக்கிறார். நாம இனிமேதான் ரெண்டாவதே." என்டாரே பாக்கலாம். அவர்கள் கண்கள் ஆச்சரியத்தினால் விரிந்தன. அப்புறம் என்ன? கான்பிரன்ஸ் ஒரு பக்கம் போய்ட்டிருக்க இவங்க இங்கால ccie க்கு படிப்பதெப்படின்னு குப்பி எடுத்திட்டிருந்தாங்க.
நிற்க, நாளைக்கு (21) தான் எக்ஸாம். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது அனந்தன் சாட்ல வர "என்ன நாளைக்கு எக்சாமுக்கு தயாரா?" என வினவுகிறேன்.
யாருக்கு நம்பிக்கை இருக்குதோ இல்லையோ எனக்கு நம்பிக்கை இருக்கிறது, தான் கனவு கண்ட இடத்தினை வெகு விரைவிலே அடைவான் என்று..
அதெல்லாம் சரி இவ்ளோ சொல்றியே, அப்போ கூடவே இருந்து உதவுறது தானே..? இப்படி அம்போ எண்டு விட்டிடு வந்து.. இப்ப என்ன பெரிய இவளாட்டம் பேச வந்திட்டே எண்டு நீங்க கேக்கிறது புரியுது. அதாகப்பட்டது என்னவென்றால் அவனது கனவுக்கான பாதையை அவன் அறிந்து விட்டான். ஆனால் எனக்கும் ஒரு கனவிருக்கிறது.. "உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அதை அடைவது சந்தோசமென்றால் அதை அடைய உதவுவது அதைவிட சந்தோசம்."
யோ. அனந்தன்: பாகம் ஒன்று
யோ. அனந்தன்: பாகம் இரண்டு
யோ. அனந்தன்: பாகம் மூன்று
தொடர்புடைய பதிவுகள்
கருத்துகள்