கனவுகளைத் தேடி அலையும் பெயரிலிகளும் அவர்கள்தம் கனவுகளும் கனவுகளைத் தேடி - 2015, பெயரிலி - 2016 நாவலாசிரியர்: கௌரி அனந்தன் விமர்சனம் : முனைவர் தோழா் பெருமா. செல்வ. இரா சேசு கௌரி அனந்தன் அவர்களின் இரண்டு நாவல்களை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு நாவலும் இரண்டு விதமானவை. இரண்டையும் தனித்தனியே பேசலாம். அந்தளவுக்கு மொழி வளமும், கதையாடல் திறனும்; மிக்கவை. “கனவுகளைத் தேடி” நாவல் சாதாரண கதையுக்தியைக் கொண்டீருக்க, “பெயரிலியோ” மாய எதார்த்தவாத தன்மையைக் கொண்டு படிப்பவரின் மனதை விடாமல் நாவலுக்குள்ளேயே பயணிக்கச் செய்கிறது. இரண்டும் வௌ;வேறு மையங்களில்; இயங்கிக்; கொண்டிருந்தாலும், அவை பயணிக்கும் பாதையும் அந்தப் பாதைகள் நெடுகிலும் ஆசிரியர் கொண்டு நிறுத்தும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் மிகவும் செறிவானவை. சுவாரசியமானவை. “கனவுகளைத் தேடி” நாவல் பெண்ணியம், சுதந்திரம், அடக்குமுறைக்கு எதிரான போராட்டம், சுதந்திரத்தாகம் எனப் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. இது இந்நாவலாசிரியரின் முதல் நாவல் என்பதை நம்மால் நம்பமுடியவில்லை. காரணம், மொழிநடை. கதையுக்தி, கதையாடல் தன்மை ப...