பாரதி கண்ணம்மா


L.O.V.E. 
L-LAKE OF SORROW,
O-OCEAN OF TEARS,
V-VALLEY OF DEATH,
E-END OF LIFE.


Those were the Quotes written on the gift received from one of my best friend long ago. They inspired me a lot, and helped me find Why Love Hurts so much..


"..Love creates problems. You can avoid those problems by avoiding love. But those are very essential problems! They have to be faced, encountered’ they have to be lived and gone through and gone beyond.."


Published Posts
யாமறிந்த மொழிகளிலே
நின்னையே ரதியென்று
நல்லதோர் வீணைசெய்தே
தீர்த்தக் கரையினிலே
நிம்மதியை தேடி
நின்னைச் சரணடைந்தேன்!


Related Posts
பாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்
பாரதி கண்ணம்மா : எச்சரிக்கை






கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
வாசிச்சாச்சு ... கமென்ட் போட கொஞ்சம் பயம்மா இருக்கு. ஏதென்ஸ் வாலிபன் வேறு யாழ்ப்பாணத்தில், தனியாளா சமாளிக்கமுடியாது!

கதை நன்றாக இருக்கிறது என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதாக இல்லை. கதையில் ஒரு உயிர் இருக்கிறது. அது சார்ந்த உணர்வும், காதலும், ஏமாற்றமும், கோபமும், கையலாகாத்தனமும் கூட இருக்கிறது. இது பாரதியிடமும் இருந்தது. பாரதியின் கோபம் அவன் தன் இயலாமையில் இருந்து தான் பிறந்தது. அதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இயலாமை weakness கிடையாது. அதுவும் ஒரு இயல்பு. நினைத்தாலும் முடியாததை எழுதி தீர்த்தவன் பாரதி. மற்றவர்களாவது முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

நீங்கள் அந்த நம்பிக்கையின் நீட்சி தான். என்ன ஒன்று, கோபம் கொஞ்சம் அதிகம். உணர்ச்சி வசப்படவும் செய்கிறீர்கள். சில இடங்களில் உங்கள் படைப்பை பாதிக்கும் அளவுக்கு. நான் கொண்டாடும் எழுத்தாளர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டதில்லை. சுஜாதா பாசறை வேறு. உணர்ச்சிவசப்பட்டால் வாத்தியார் get out சொல்லிவிடுவார். அதனால் அவர்களின் பாத்திரங்கள் ஒரு செடேட்டிவ் ஆன உணர்ச்சிகளை வெளிக்காட்டும். உணர்ச்சிவசப்படுதலின் உச்சம் அது. அதை நீங்கள் அடையவேண்டும் என்பது இல்லை. அது சரிதானா என்றும் தெரியாது. அது எனக்கு பிடித்த எழுத்து நடை. அவ்வளவே.

உங்கள் பாரதி பற்றிய தேடல் ஆச்சரியப்படுத்துகிறது. எனக்கு பாரதியை அந்த அளவுக்கு தெரியாது. ஆனால் உங்கள் காதல் அலாதியானது. எந்த அளவுக்கு என்றால், சில சமயம் கதையின் போக்கை அது டாமினேட் பண்ணும் அளவுக்கு. ஆனால் அது தான் எழுத்தாளர் நோக்கமாகவும் இருக்கலாம். மீண்டும் வாசிக்கவேண்டும். எனக்கு புரிதல் ஏற்படலாம்.

பாரதியின் மீது கண்ணமாவுக்கு கண் மண் தெரியாத காதல். அவன் கொஞ்சம் அப்படி இப்படி என்றால் இவளுக்கு பிடிப்பதில்லை. அர்ஜூனன் தயங்கியது, தவத்தை இடை நடுவில் கலைக்கவேண்டி இருக்கிறதே என்று, காரணம் அவன் அந்த பெண்ணின் மீது கொண்ட ஈர்ப்பு(காதல் இல்லை, அர்ஜூனன் is not a love material) தான். ஆனால் கண்ணம்மா அதை உய்த்தறிய தயாராக இல்லை. கண்ணம்மாவின் அவசரக்குடுக்கை குணத்தை அந்த புள்ளியில் நன்றாகவே காட்டினீர்கள். எழுத்தாளர் கௌரி வெற்றி கொண்ட தருணங்கள் அவை.

கொஞ்சம் அவசரம் அவசரமாக எழுதிவிட்டீர்களோ? இன்னும் detailing எதிர்பார்த்தேன். முக்கியமாக பாரதி இருந்த வார்டு சரியாக காட்டுப்படவில்லை. அங்கே இருக்கும் ஊழியரின் உளவியல் மிஸ்ஸிங் தான். அவர்களுக்கு அவன் இன்னொரு கான்சர் பேஷன்ட். கண்ணம்மாவுக்கோ அவன் உயிர். முன்னதை அதிகம் காட்டும்போது தான் கண்ணம்மா காதல் எங்களுக்கு இன்னும் புரியும். நான் தலையை பிய்த்துக்கொள்வேன் இந்த விஷயத்தில். அதனால் ஓவர் டோஸ் ஆக போனதும் உண்டு. அதற்கு உதாரணம் தான் குட்டி கதையில் எலுமிச்சை விற்பதை விளக்கியது. அது குட்டிக்கும் எனக்குமிடையேயான அடிப்படை உளவியல் வித்தியாசத்தை காட்ட முயன்ற இடம். குட்டியை தெரியாதவர்களும் நேசிக்க, குட்டி சம்பந்தப்படாத அந்த காட்சிகள் காரணமாயின. என் கதையை மேற்கோள் காட்டுவது கேவலம் தான். நீங்கள் வாசித்தீர்கள் என்பதால் சொன்னேன்.

கவிதையில் உங்களுக்கு இருக்கும் ஆளுமை வியக்க வைக்கிறது. அதிலும் கவிதையில் உரைநடை உங்களுக்கு நன்றாக வருகிறது. இந்த கதை முழுக்க முழுக்க உரைநடை கவிதையாகவே வந்திருந்தால் one of the all time best உரை நடை கவிதையாக மிளிர்ந்திருக்கும். உங்களுக்கும் அடிச்சு ஆட வசதியாக இருந்திருக்கும். ஆனால் இங்கே பல இடங்களில் நீங்களே உங்களை hold back பண்ணி இருக்கிறீர்கள். என்ன ஆச்சு கௌரி?

ஒரு எழுத்தாளருக்கு இதை எழுதி இருக்கலாமே என்று suggest பண்ணினால் “பொத்திக்கொண்டு போடா” என்று தான் சொல்ல தோன்றும்! பத்த வத்தாச்சு, நீங்களே திட்டி அனுப்பும் முன்னர் நான் escape! நமக்கு இருக்குது சொந்த படலை. அங்க பாத்துக்கலாம்.
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//வாசிச்சாச்சு ... கமென்ட் போட கொஞ்சம் பயம்மா இருக்கு.//
அய்.. கடைசியா திருவாய் மலர்ந்தருளியுள்ளீர்கள். இதுக்கே நாப்பது தேங்கா உடைக்கவேணும். அதைவிட்டிடு உங்களைப் போய் யாராவது ஏன் எழுதினீங்கள் எண்டு கேட்ப்பார்களா?

// நினைத்தாலும் முடியாததை எழுதி தீர்த்தவன் பாரதி. மற்றவர்களாவது முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில். //
உண்மைதான்.. :(

//கோபம் கொஞ்சம் அதிகம். உணர்ச்சி வசப்படவும் செய்கிறீர்கள். சில இடங்களில் உங்கள் படைப்பை பாதிக்கும் அளவுக்கு.//
சிலநேரம் கதைக்குள்ளேயே போய்விடுவதால் அந்தத் தவறு நேர்கிறது. முன்பெல்லாம் எழுதிவிட்டு ரெண்டுகிழமை கழித்து திருப்பிப் பார்த்து திருத்துவேன். அப்போது முதலில் உணர்ச்சிவசப்படச் செய்த பல இடங்களை எளிதில் கண்டுபிடித்து நீக்கவோ திருத்தவோ முடிந்தது. ஆனால் இந்தமுறை கொஞ்சம் அவசரப்பட்டிடன்.

//எந்த அளவுக்கு என்றால், சில சமயம் கதையின் போக்கை அது டாமினேட் பண்ணும் அளவுக்கு. ஆனால் அது தான் எழுத்தாளர் நோக்கமாகவும் இருக்கலாம்.//
இதற்க்கு http://naanumorurasikai.blogspot.com/2011/12/blog-post_08.html?showComment=1323610077101#c8756695943361119642 இல் சொல்லியதுபோல் பாரதியில்லைஎன்றால், அவனது வரிகள் மட்டும் இல்லை என்றால் அவள் இல்லை என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியிருக்கிறேன். அவை மட்டும் இல்லது போயிருந்தால் அவளை நினைவுகள் என்றோ கொன்று போட்டிருக்கும். அதன் உச்ச கட்டம் தான் "அந்த இயற்கையன்னையின் மடியில் அவனது வரிகளுக்குள்ளே அவள் ஒரு புதுவாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டிருந்தாள்." என்ற வரி.

//பாரதியின் மீது கண்ணமாவுக்கு கண் மண் தெரியாத காதல். அவன் கொஞ்சம் அப்படி இப்படி என்றால் இவளுக்கு பிடிப்பதில்லை. அர்ஜூனன் தயங்கியது, தவத்தை இடை நடுவில் கலைக்கவேண்டி இருக்கிறதே என்று, காரணம் அவன் அந்த பெண்ணின் மீது கொண்ட ஈர்ப்பு(காதல் இல்லை, அர்ஜூனன் is not a love material) தான். ஆனால் கண்ணம்மா அதை உய்த்தறிய தயாராக இல்லை. கண்ணம்மாவின் அவசரக்குடுக்கை குணத்தை அந்த புள்ளியில் நன்றாகவே காட்டினீர்கள். எழுத்தாளர் கௌரி வெற்றி கொண்ட தருணங்கள் அவை.//

நன்றி. தான் சொல்லவந்தது முழுதாய் போய் வாசகனிடம் சேர்ந்துவிட்டது என்பதுதான் எழுத்தாளனின் வெற்றி. அந்தளவில் உங்கள் புகழ்ச்சியை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். :)
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//கொஞ்சம் அவசரம் அவசரமாக எழுதிவிட்டீர்களோ? இன்னும் detailing எதிர்பார்த்தேன்.முக்கியமாக பாரதி இருந்த வார்டு சரியாக காட்டுப்படவில்லை. அங்கே இருக்கும் ஊழியரின் உளவியல் மிஸ்ஸிங் தான். அவர்களுக்கு அவன் இன்னொரு கான்சர் பேஷன்ட். கண்ணம்மாவுக்கோ அவன் உயிர். முன்னதை அதிகம் காட்டும்போது தான் கண்ணம்மா காதல் எங்களுக்கு இன்னும் புரியும். //
உண்மைதான். நீங்கள் கூறியதுபோல் detailing இல் இனிமேல் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன். இதில் கடைசியில் தான் ஒரு சிறிய இடத்தில் குறித்துக் காட்டியிருப்பேன் ஆனால் அவ்வளவு அழுத்தமாய் பதியவில்லை போலும்.
"nurse வந்து அவனை ICUக்கு கூட்டிடு போவதாகவும் சத்தியாவிடம் சொல்லிவிடுமாறும் சொன்னார். அவளுக்குப் புரியவில்லை. இவ்வளவுநேரமும் நல்லாத்தானே இருந்தான்? மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள் போல அடித்துப் போட்டதுபோல் கிடந்தான்." அவள் உயிராய் நினைக்குமொன்றை அவர்கள் வெறும் உடலைப் பார்க்கிறார்கள் என்ற ஒரு சிறு கருத்து. ஆனால் சரியாய் பொருந்தவில்லையோ தெரியவில்லை.

//என் கதையை மேற்கோள் காட்டுவது கேவலம் தான்.//
உங்கள் குட்டி மற்றும் கடவுள் துயிலும் தேசத்தை யார்வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கோள் காட்ட எடுத்துக்கொள்ளலாம். தப்பேயில்லை. :)

//கவிதையில் உரைநடை உங்களுக்கு நன்றாக வருகிறது. இந்த கதை முழுக்க முழுக்க உரைநடை கவிதையாகவே வந்திருந்தால் one of the all time best உரை நடை கவிதையாக மிளிர்ந்திருக்கும். //
ஆச்சரியமாயிருக்கிறது. முதலில் அந்தத் திட்டத்துடன் தான் தொடங்கினேன். ஆனால் எனக்குள் இருக்கும் ஒரு குறைபாடு என்னவென்றால் உரைநடை கவிதையாய் எழுதத் தொடங்கும்போது, சிறிது நேரம் நன்றாகவே போய்க்கொண்டிருக்கும். திடீரென்று ஒரு suicide அட்டெம்ப்ட் மாதிரி முடித்துவிடுவேன். அதை நீங்கள் "அடர் பெரும் காடு, அதன் நடுவிலொரு மண்வீடு" என்ற தொகுதியில் உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அவள் தொடங்கியபோது பாரதியே முதலில் பாராட்டுவதுபோலிருக்கும். திடீரென்று தனது உணர்வுகளைக் கொட்டப் போய் அதன் தன்மையையே மாற்றி கடைசியில் ஏன்டா கேட்டோம் என்ற நிலையில் முடித்திருப்பாள். அந்த நிலையிலிருந்து என்று என்னால் வெளிவர முடிகிறதோ, அன்று நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்ததுபோல் ஒரு "one of the all time best உரை நடை கவிதை" உருவாக்குவேன். இவ்வளவு துல்லியமாக அலசியிருப்பது எனக்கு நிறையவே மகிழ்ச்சியாகவிருக்கிறது.

//ஆனால் இங்கே பல இடங்களில் நீங்களே உங்களை hold back பண்ணி இருக்கிறீர்கள். என்ன ஆச்சு கௌரி?//
சில இடங்களில் பாரதியின் வரிகளைக் கடன்வாங்கி நிரப்பியிருப்பேன். இது தயக்கமா/பயமா/விருப்பமின்மையா தெரியவில்லை. எதுவோ ஒன்று தடுக்கிறது. உங்களுக்குத்தெரிந்தால் தயவுசெய்து சொல்லிவிடுங்கள். மீண்டும் ஏற்படாவண்ணம் தடுக்க உதவும்.

//ஒரு எழுத்தாளருக்கு இதை எழுதி இருக்கலாமே என்று suggest பண்ணினால் “பொத்திக்கொண்டு போடா” என்று தான் சொல்ல தோன்றும்! பத்த வத்தாச்சு//
அந்தப் பதிவு எதற்காய் எழுதியது என்று முதலிலையே சொல்லிட்டன். திரும்பத் திரும்ப கிளறாதேங்கோ. நீங்கல்லாம் வசிட்டர்மாதிரியாக்கும். ஏதோ "வசிட்டர் வாயால பிரம்மரிஷிப் பட்டம்" வாங்கினதுபோல இருக்குது.. ஹிஹி ரொம்ப அதிகமோ..? :)
ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
கொஞ்சம் ஓவரா தான் இருக்கு .. இந்த கிழமை பதிவு ஒன்னு போட்டுடலாம் .. படிச்சதென்ன பிடிச்காதென்ன வில
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த கிழமை பதிவு ஒன்னு போட்டுடலாம் .. படிச்சதென்ன பிடிச்காதென்ன வில//
அச்சச்சோ ஏன் இந்தக் கொலைவெறி?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இணையத்தில்.. (Click here)