சிறுகதைகள்


"அவனுக்கு நீ தேவையே ஒழிய, நீ தான் அவனது உலகமென்றில்லை." என்பார். அவர் சொல்வதும் ஒருவகையில் உண்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களிடம் அவளைக் கவர்ந்ததே அவர்களது ஆளுமைதானே..? 

"ஏன் அப்பா இவை இப்பிடி இருக்கினம்? கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.." எரிச்சலுடன் கேட்டாள்.
"அவைண்ட நிலை அப்பிடி." கூறியவர் மேலே எதுவும் சொல்லவில்லை. நிதானமாய் விபரிக்கும் சூழ்நிலையிலும் அவர் இருக்கவில்லை.

புத்தர்களை வெளியே காவலிருத்தி அந்த மரக்கொட்டகைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று இன்றுவரை அவளுக்குத் தெரியாது.  தெரிந்துகொள்ளவும் விரும்பியதில்லை.

"இப்ப எதுக்கு சிரிச்சனீர்?"
"ஒன்றுமில்லை சார்"
"காரணமில்லாமல் சிரிக்க உமக்கு என்ன விசரே?"

வறண்டு வெடித்த நிலத்தின் மேல் கள்ளிச் செடிகள் பூதாகரமாய்த் தெரிய அதன் நிழல் விழும் தூரத்தில் இருட்டும் ஒளியும் சேர்ந்து.. வைற்றுக்குள் எதுவோ பிசைவதுபோலிருன்தது..

"இன்னிக்கு Christmas. உனக்கு ஏதாச்சும் தரனும் போல இருக்கும்மா. ஆனா என்கிட்ட இப்ப இவ்வளவு தான் இருக்கு. உனக்கு பிடிச்சதை.." தயங்கித் தயங்கி ஒருவாறு சொல்லி முடித்த போது துடித்துப்போனாள்.

சுற்றிவர வண்ண வண்ண விளக்குகளில் விட்டில் பூச்சிகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன. அவர்களுக்குத் தெரியும் நாளை விடியாதென்று.. சம்பந்தமேயில்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவுக்குவந்தது.























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இணையத்தில்.. (Click here)